"டி. ஆர். ராஜகுமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

297 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
| notable role =
}}
'''டி. ஆர். ராஜகுமாரி''' (மே 5, 1922 – செப்டம்பர் 20, 1999) [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரையுலகின்]] முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தவர். தாயார் ரெங்கநாயகி தஞ்சை குஜலாம்பாள் அவா்களின் புகழ் பெற்ற இசை மேதை குடும்பத்தை சோ்ந்தவா். ராஜகுமாாி பிறந்த சில நாட்களிலே தகப்பனரான ராதாகிருஷ்ணன் இறந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் [[டி. ஆர். ராமண்ணா|டி.ஆர். ராமண்ணா]] குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
 
== திரைப்படத்துறை பங்களிப்புகள் ==
[[1939]] ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் [[குமார குலோத்துங்கன்]] படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ''மந்தாரவதி'', ''சூர்யபுத்ரி'' படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணிய]]த்தின் தயாரிப்பில் வெளிவந்த [[கச்ச தேவயானி]] படம் பெரு வெற்றி பெற்றது.
 
[[எம். கே. தியாகராஜ பாகவதர்|எம்.கே. தியாகராஜ பாகவதர்]], [[பி. யு. சின்னப்பா|பி.யு. சின்னப்பா]], [[எம். கே. ராதா|எம்.கே. ராதா]], [[டி. ஆர். மகாலிங்கம்|டி.ஆர். மகாலிங்கம்]] என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.
 
[[பி. யு. சின்னப்பா|பி.யு. சின்னப்பா]]வுடன் [[மனோன்மணி]] படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] [[சிவகவி]], [[ஹரிதாஸ்]] படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் [[சந்திரலேகா]] படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் [[எம். கே. ராதா|எம்.கே. ராதா]]வுக்கு இணையாகசோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய '''ஜிப்சி''' நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. [[இந்தி]] சந்திரலேகாவிலும் நடித்தார்.
 
கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் வசனத்தில் உருவான [[மனோகரா]] படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். [[வானம்பாடி]] படத்தில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு]] அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் [[தங்கப்பதுமை]] திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், [[பெரிய இடத்துப் பெண்]] திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.
 
சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.
 
=== பின்னணிப் பாடகியாக ===
[[இதய கீதம்]] திரைப்படத்தில் ''வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே'', ''ஓடி வா வெண்முகில் போலே'' ஆகிய இரண்டு பாடல்களை டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/ithaya-geetham-1950/article464520.ece | title= Ithaya Geetham (1950)| work=[[தி இந்து]] | date=17 ஜூன் 2010 | accessdate=29 நவம்பர் 2016 | archiveurl=http://archive.is/NHc4w| archivedate=12 ஆகஸ்ட் 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
1,13,667

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2804733" இருந்து மீள்விக்கப்பட்டது