சிங்கப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2779095 2405:204:738D:29E:0:0:2269:88B1 உடையது. (மின்)
வரிசை 71:
 
== பெயர்க்காரணம் ==
சிங்கப்பூர் சிங்கம் +புரம்ஊர் = சிங்கப்பூர், அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டதும் ஆகும். சிங்கப்பூர் என்ற பெயர் ''சிங்கப்பூரா'' என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா ([[சிங்கம்]]) மற்றும் பூரா ([[ஊர்]]) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின்படி [[14ம் நூற்றாண்டு]] [[சுமாத்திரா]] மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு.
 
== வரலாறு ==
வரிசை 83:
[[படிமம்:Stamford Raffles statue.jpg|thumb|left|200px| தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்]]
 
1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பவர் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். அப்பகுதியின்இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி [[சுல்தான் ஹுசேன் ஷா]]வுடன் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் [[குடியேற்றநாடு]] ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான [[வில்லியம் பர்குகார்]] (''William Farquhar'') சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் [[முடிக்குரிய குடியேற்ற நாடு|முடிக்குரிய குடியேற்ற நாடாக]], பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.
 
[[சிங்கப்பூர் ஆறு]], பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் [[மீனவர்]]களாகவும், [[கடலோடி]]களாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிபப்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள்பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது