பேச்சு:ஆப்கானித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
::முதலாவது இங்கு எழுதும் மொழி தமிழ் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தமிழ் எழுத்துகளில் தமிழில் வழங்கும் பெயர் வடிவின் சரியான முதல்மொழி வடிவைக் கண்டபின் பொருள் கொள்ளத்தொடங்குங்கள். Bank என்பதை ஒருவன் பாங்கி என்றால் தமிழில் நண்பன் என்று பொருள். அதன் முதல் மொழி அறிந்து அதிலும் சரியான பொருள் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும். இபயத்துல்லா கூறுவதை நோக்கும் பொழுது, தாஃகிர் சா என்று தமிழில் எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். பாஃகிம் கூறுவதை நோக்கினால் இழாஃகிர் சா என எழுத வேண்டுமோ எனத் தோன்றுகின்றது. சா என்பது வேண்டாம் எனில் இழ்சா என்று எழுதுங்கள். ழ்சா என்பது ஏறத்தாழ shaa என்பது போலவே ஒலிக்கும். இராமன், இலிங்கம் என்பது போல இழ்சா எனலாம். தமிழில் மெய்யெழுத்தில் தொடங்குதல் கூடாது. சேர்த்து எழுதினால் தாஃகிர்ழ்சா என்றோ இழ்சாஃகிர்ழ்சா என்றோ எழுதலாம். எப்படி அரபி மொழியிலோ ஆங்கிலத்திலோ ஞானசம்பந்தன், நெடுஞ்செழியன், அழகப்பன், வள்ளி முதலான பெயர்களை எழுத இயலாதோ, அதுபோலவே பல அரபி மொழிச்சொற்களைத் தமிழில் எழுத இயலாது. இதனைப் பயனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.--[[பயனர்:செல்வா|செல்வா]] 17:58, 17 அக்டோபர் 2010 (UTC)
 
==தலைப்பை மாற்றுக==
இத்தலைப்பு [[விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு|விக்கிப்பீடியா பெயரிடல் மரபின்]] பண்புகளுக்கு முரணாக உள்ளது. '''ஆப்கானிஸ்தான்''' என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை '''ஆப்கானிஸ்தான்''' என்று மாற்றுவதே சரி.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஆப்கானித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆப்கானித்தான்" page.