உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
 
[[பயனர்:Fahimrazick]], பழந்தமிழருக்கு எந்த மதமும் கிடையாது. பிறர் புகுத்திய மதங்களை ஏற்றுக்கொண்டோம் அல்லவா? அதுபோல் கிரந்த எழுத்துக்களை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது? பழந்தமிழருக்கு ஜ, ஸ, ஹ போன்ற ஒலிப்புகள் தேவைப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் பிறமொழிச் சொற்களைக் குறிக்க அவை தேவைப்பட்டது. எனவே காலத்திற்கேற்பத் தகவமைத்துக் கொள்வதுதானே இயற்கையின் நியதி? சூரியன், சந்திரன் போன்ற பிறமொழிச் சொற்களால் தான் தமிழின் தனித்தன்மை பாதிக்கிறது. கிரந்த எழுத்துக்களால் தமிழுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போதும் அவை பரவலாக பயன்பாட்டில் உள்ளன. தாங்கள் [[உருசியா]] உரையாடலில் குறிப்பிட்டுள்ளதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்தியா பல்வேறு மொழிகளைப் பேசும் நாடு. அங்கு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. எனவே தங்கள் ஒப்பீடு முற்றிலும் முரணானது. தாங்கள் தமிழகத்தில் வந்து இசுக்கொட்லாந்து, யப்பான் என்று எழுதிக் காண்பித்தால் பலருக்கும் புரியாது. தங்கள் பெயரையே பாஹிம் என்றுதானே எழுதுகிறீர்கள்? அதில் கிரந்தம் இல்லையா? [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 12:31, 25 செப்டம்பர் 2019 (UTC)
 
----
 
தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கையைச் சேர்ந்த நிர்வாகிகளே பெருமளவில் உள்ளனர். அவர்கள் தங்கள் விருப்பப்படி தலைப்புகளை அமைத்துக் கொள்கின்றனர். அவர்களின் கைகளில் பல காலமாக அகப்பட்டுள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துக்களை இங்கு வேண்டுமானால் நீக்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழர் வாழ்வில் இருந்து அவற்றை நீக்குவது சாத்தியமில்லை. இனி இந்த விக்கிப்பீடியாவை இலங்கைத் தமிழர் விக்கிப்பீடியா என்று பெயர்மாற்றம் செய்துவிடுங்கள். தமிழகத் தமிழருக்கென தனி விக்கிப்பீடியாவை உருவாக்குங்கள். அதுவே நியாயமாக இருக்கும். இல்லையென்றால் இங்கு நிர்வாகிகள் இழைத்துவரும் அநியாயத்திற்கு நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும். இனி இதுபற்றி நான் வருத்தப்படப் போவதில்லை. தங்களைக் கேள்வி கேட்கவும் கட்டுப்படுத்தவும் யாரும் இல்லை என்பதால் நிர்வாகிகள் ஆணவத்துடன் தங்கள் விருப்பப்படி செயல்பட்டு வருகின்றனர். ஒருநாள் அதிகாரம் கைமாறும். அப்போது என் கருத்துக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 11:36, 25 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:GangadharGan26" இலிருந்து மீள்விக்கப்பட்டது