மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
மூ. வ.
வரிசை 1:
<br />
 
=== பிறப்பு ===
    ஈசுரமூர்த்தியா பிள்ளை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்ப் பள்ளத்தில் பொன்னம் பலம் பிள்ளை அவர்களுக்கும், சிதம்பர வடிவம்மையாருக்கும் - கொல்லம் 1035 ஆம் ஆண்டு (கி. பி. 1861) வைகாசி  மாதம் 23 ஆம் நாளன்று புதல்வராக தோன்றினார். பொன்னம்பலம் அவர்கள் பல நூல்களை எழுதியும், கற்றும், போதித்தும் வந்தவர்.  
 
=== கல்வி ===
    ஈசுரமூர்த்தியா பிள்ளை தம் இளவயதில் பிறந்த ஊரில் உள்ள கிரந்த பாடசாலையில் வடமொழியும், தமிழ் பாடசாலையில் தமிழும் பயின்றார்.  இவர் நெல்லை இந்து கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலம் கற்றார். தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தந்தையின் உதவியுடன் பயின்று புலமைபெற்றார்.  நூல்களில் பெரும் பயிற்சியுடைய ஈசுர பிள்ளைக்கு காலத்திற்கேற்ற வகையில் எல்லோருக்கும் புரியும் நடையில் தமிழை வளர்க்கும் பணியில் ஆர்வம் பிறந்தது.  இதற்கு முக்கிய காரணம் மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்களின் நூலில் இவருக்கு ஏற்பட்ட ஈடுபாடுதான்.  
 
=== ஆசிரியப் பணி ===
    பிள்ளையவர்கள் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்து பலருக்கும் தமிழ் அறிவை ஊட்டினார்.   1888ஆம் ஆண்டு தொடங்கி 1920 வரை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திருவில்லிபுத்தூர், சென்னை ஆகிய இடங்களில் உயர்தரப் பாடசாலைகளிலும், சிலகாலம் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், சி. எம். கல்லூரியிலும் தமிழாசிரியராய் பணியாற்றினார்.  தனிப்பட்ட முறையில் இவரிடம் தமிழ், ஆங்கிலம் கற்றுப் பயனடைந்தவர்கள் பலராவர்.
 
=== இயற்றிய நூல்கள் ===
    இவர் நூல்கள் பலவும் பெண்பாலர்க்காக இயற்றப்பட்டவையாகும்.  இவர் பாடிய '''நாட்டுப்பெண் கும்மி, திருமண வாழ்த்து, நீதி நெறித் தாலாட்டு'''  என்பன மகளிரின் வாழ்வு மாண்புறத்தக்க வகையில் நல்ல கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கியவையாகும்.  '''அகராதி மாலை''' என்பது ஒரு துதி நூல்.  '''சதுர்வேத இயல்முறை, திருவருள் விளக்கம், பிரம சபையின் கருத்து''' முதலியன சமயச் சார்புடைய நூல்களாகும்.  இவர் பாடிய தனிப் பாக்கள் பலவாகும். உரைநடை நூல்களில் '''கைலாசம்பிள்ளை வரலாறு, தாயம்மையார் சரித்திரம், பண்டாரம்பிள்ளை வரலாறு’'''என்பவை குறிப்பிடத்தக்கவை.  தூத்துக்குடியில் தாம் ஆசிரியராயிருந்தபோது '''‘மாணவர் போதம்’''' என்னும் சஞ்சிகை(பத்திரிக்கையின் ஒரு பகுதி)யைச் சிலகாலம் நடத்தி வந்தார்.
 
=== ஆக்கப் பணிகள் ===
மாணவர் உலகத்திற்கும், குறிப்பாக மங்கையர் மேம்பாட்டிற்கும், காலத்திற்கேற்ற வகையில் தமிழின் புதுமை வளர்ச்சிக்கும் தேவையான ஆக்கப் பணிகளை இவர் தம் வாழ்வின் முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டார்.  இவர் 1940 ஜனவரி 23 ஆம் நாளன்று இயற்கை எய்தினார்.
 
== ஆதாரங்கள் ==
 
# http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk10/html/lkk10119.htm
 
<br />
"https://ta.wikipedia.org/wiki/மு._பொ._ஈசுர_மூர்த்தியா_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது