ஐந்நூற்றுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
small chg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
===வீர வளஞ்சியர்===
ஐந்நூற்றுவர் கழக வணிகர்கள் கன்னடத்தில் வீர பலஞ்சா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் தெலுங்கில் வீர [[பலிஜா]] என்றும் "தீரமிக்க வணிகர்கள்" என்ற பொருளில் அழைக்கப்பட்டனர்.<ref>''Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh'', Volume 100, by SS Shashi, p.86</ref> வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட இவ்வணிகர்களைப் பற்றி நடுக்கால [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்துக்]] கல்வெட்டுக்கள் பலவும் குறித்துரைக்கின்றன.<ref>''Studies in economic and social conditions of medieval Andhra'', by K.Sundaram, p.69-76</ref> வீர வளஞ்சியர் பற்றிக் காணப்படும் கல்வெட்டுக்கள் நிறையவே உள்ளன. எடுத்துக் காட்டாக, ஆந்திராவின் [[கடப்பா]] மாவட்டத்தில் உள்ள அனிலமை எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1531 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று அக்கிராமத்திலிருந்த சங்கமேசுவரர் கோயிலுக்கு ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் [[வளஞ்சியர்|வீர வளஞ்சியர்களால்]] கொடையளிக்கப்பட்ட விளக்கின் காரணமாகப் பருத்தி, நூல், துணிமணிகள் போன்ற வணிகப் பொருட்களுக்கான தீர்வை நீக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது.<ref>''Hindu and Muslim religious institutions, Andhra Desa, 1300-1600'', by Ravula Soma Reddy, p.110</ref>
 
ஐந்நூற்றுவர் அல்லது ''ஐயவோலா-எனும்பாரு-சுவாமிகளு'' எனப்பட்டோர் வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகவும் வீர வளஞ்சிய சமயத்தைப் பின்பற்றுவோராகவும் இருந்தனரென்று [[நெல்லூர்]]ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.<ref>''The quarterly journal of the Mythic society (Bangalore)'', Volume 82, p.88-91</ref> [[குண்டூர்]] மாவட்டத்தின் சிந்தப்பள்ளியில் காணப்பட்ட பொ.கா. 1240 ஐச் சேர்ந்த கல்வெட்டொன்று வீர வளஞ்சிய சமயத்தில் (வணிகக் கழகத்தில்) உபயநானாதேசிகளும் கவரர்களும் மும்முறி தண்டர்களும் இருந்ததாகவும் ஐந்நூறு வீரர்களைத் தம்முடன் வைத்திருக்கும் உரித்துடையோராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.<ref>''A study of the history and culture of the Andhras'', Volume 2, by Kambhampati Satyanarayana, p.52</ref> இவர்களில் உபயநானாதேசிகள் எனப்படுவோர் பல்வேறு பகுதிகளையும் நாடுகளையும் சேர்ந்த தேசிகளும் பரதேசிகளும் நானாதேசிகளுமாக இருந்த அதே வேளை, கவரர்கள் எனப்படுவோர் கவரேசுவரர் எனப்பட்ட கடவுளை வழிபடும் வணிகர்களாக இருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஐந்நூற்றுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது