நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
'''நீர்''' (''water'') என்பது H<sub>2</sub>O என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். [[புவி]]யிலுள்ள [[ஓடை]]கள், [[ஏரி]]கள், [[கடல்]]கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் [[ஆக்சிசன்]] அணுவுடன் இரண்டு [[ஐதரசன்]] அணுக்கள் [[சகப் பிணைப்பு]] மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்டவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் [[நீராவி]]யாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் [[பனிக்கட்டி]] வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக [[ஆவியுயிர்ப்பு|நீராவிபோக்கு]], [[ஆவி ஒடுக்கம்]], [[பொழிவு (வானிலையியல்)|வீழ்படிவு]] போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டே கடலைச் சென்றடைகிறது.
 
புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/xx.html#Geo|title=CIA- The world fact book|publisher=Central Intelligence AgencyIntelligencelllAgency l|accessdate=2008-12-20}}</refrelf>ll. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி [[நிலத்தடி நீர் கொள் படுகை|நீர்கொள் படுகை]]களிலும் காணப்படுகிறது. [[வளி மண்டலம்|வளி]] மண்டல நீரின் 0.001% பகுதி [[ஆவி|வாயு]] வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் [[மேகம்|மேக]]ங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் [[குளிர்ந்து சுருங்குதல்|நீர்க்கோர்வைகளிலும்]] காணப்படுகிறது.<ref>
[http://www.agu.org/sci_soc/mockler.html வாட்டர் வேப்பர் இன் தி க்ளைமேட் சிஸ்டம் ], ஸ்பெஷல் ரிபோர்ட், [AGU], டிசம்பர் 1995 (லிங்க்ட் 4/2007). [http://www.unep.org/dewa/assessments/ecosystems/water/vitalwater/ வைட்டல் வாட்டர் ] UNEP.</ref> நில மேலோட்ட நீரின் 97% பகுதி [[கடல் நீர்|உவர்நீர்ச்]] [[ஆழிப் பெருங்கடல்|சமுத்திரங்களிலும்]], 2.4% [[உறை பனி ஆறு|பனி ஆறுகள்]] மற்றும் [[பனிக்கவிகை|துருவ பனிக்கவிகை]]களிலும், ௦0.6%பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான [[ஆறு|ஆறுகள்]], [[ஏரி|ஏரிகள்]], [[குளம்|குளம் குட்டை]]களிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக்கவிகைகளிலும், பனி ஆறுகளிலும், நீர் கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும் சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது