"ரூமிலா தாப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Semmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
'''உரொமிலா தாப்பர்''' ''(Romila Thapar)'' (பிறப்பு: 30 நவம்பர் 1931) இந்திய வரலாற்றாசிரியர் ஆவர். இவரது முதன்மையான ஆய்வுப் பரப்பு பண்டைய இந்திய வரலாறு ஆகும். இவர் பல இந்திய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அதோடு ''இந்திய வரலாறு'' எனும் மக்களுக்கான நூலையும் எழுதியுள்ளார். இவர் இப்போது புதுதில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியராக உள்ளார். இவருக்கு இருமுறை [[பத்ம பூசண்]] விருது வழங்கப்பட்டாலும் அவற்றை இவர் ஏற்க மறுத்துவிட்டார்.
 
== இளமையும் கல்வியும் ==
புகழ் பெற்ற பஞ்சாபிக் குடும்பத்தில் ரூமிலா தாப்பர் பிறந்தார். இவருடைய தந்தை படையில் பணியாற்றியதால் இந்தியாவின் பல பகுதிகளில் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழை, ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் 1958 இல் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாய்வாளர் [[ஏ. எல். பாஷம்]] தலைமையின் கீழ் லண்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.<ref name="penguin">{{cite web|title=Romila Thapar|url=http://www.penguinbooksindia.com/en/content/romila-thapar|publisher=Penguin India|accessdate=12 December 2014}}</ref>
 
== வாழ்க்கைப்பணி ==
 
இவர் 1961 முதல் 1962 வரை குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் உயர்விரிவுரையாளராக இருந்தார். இதே பதவியில் 1963 முதல் 1970 வரை தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் இவர் புது தில்லி சவகர்லால் பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் பேராசியரியராகப் பணியாற்றினார். இவர் இங்கு இப்போது தகைமைப் பேராசிரியராக உள்ளார்.<ref name="jnu">{{cite web | url=http://www.jnu.ac.in/sss/chs/RomilaThapar.pdf | title=Romila Thapar, Professor Emerita | publisher=JNU | accessdate=7 December 2014 | deadurl=yes | archiveurl=https://web.archive.org/web/20150616014605/http://www.jnu.ac.in/sss/chs/RomilaThapar.pdf | archivedate=16 June 2015 | df=dmy-all }}</ref>
 
இவர் ஆசிய ஐரோப்பா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தம் வரலாற்று ஆய்வைச் செய்தார். சீனாவில் உள்ள புத்தர் காலக் குகைகளைப் பார்த்தார். ஆரியர்களின் முதல் வருகையில் இருந்து முசுலிம்களின் வருகை வரை உள்ள வரலாற்றை எழுதியுள்ளார். இந்திய நாடு மதச் சார்பில்லாமல் அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறுபவர். இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர். இவர் ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார். அடிப்படை வாதம் பேசுவோரும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவருகிறார்கள் என்பது அவர் கருத்து. அரசியல் நோக்கில் வரலாறு எழுதப்படுதல் கூடாது என்றும் வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் சொல்லி வருகின்றார்.
 
== தகைமைகள் ==
* ஆக்சுபோர்டில் லேடி மார்கரட் ஆல் என்பதில் மதிப்புமிகு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
* கார்னெல் பல்கலைக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக் கழகம், பாரீசு நகரில் உள்ள காலேஜ் தி பிரான்சு ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.
[[File:Romila Thapar.jpg|thumb|2016 ஜூன் 23 இல் உரொமிலா தாப்பர்]]
 
== கொள்கையில் உறுதி ==
கல்வி நிலையங்கள் வழங்கும் விருதுகளையும் மதிப்புகளையும் மட்டுமே ஏற்றுக் கொள்வது என்னும் கொள்கையை வரையறுத்துக் கொண்டார். ஆதலால் 1992 ஆம் ஆண்டிலும் 2005 ஆம் ஆண்டிலும் இந்திய அரசு ரொமிளா தாப்பருக்கு பத்ம பூசண் விருது வழங்க முன்வந்தபோது அவ்விருதை ஏற்க மறுத்தார். 2002 இல் பள்ளிகளில் வரலாற்றுப் பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்போது இந்துத்துவக் கொள்கையைக் கல்வி நிலையங்களில் அரசு திணிக்கப் பார்க்கிறது என்று தாப்பர் கண்டித்தார்.
 
== நூல்தொகை ==
;நூல்கள்
* ''Aśoka and the Decline of the Mauryas'', 1961 (revision 1998); Oxford University Press, {{ISBN|0-19-564445-X}}
* ''Was there Historical Writing in Early India?'', Essay in ''Knowing India'', 2011; Yoda Press, {{ISBN|978-93-80403-03-8}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commons category|Romila Thapar}}
* [http://depts.washington.edu/schkatz/podcasts/thapar_podcast.mp3 Audio of Romila Thapar's 2005 lecture, "Interpretations of Early Indian History"] at the [[Walter Chapin Simpson Center for the Humanities]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2809285" இருந்து மீள்விக்கப்பட்டது