"திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நேரில் திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
(உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.)
(நேரில் திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு)
==இறைவன், இறைவி==
இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்க வண்ணர்,இறைவி வண்டுவார் குழலி.
 
==அமைப்பு==
கோயிலின் முன்பாக குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மர விநாயகரைக் கொண்ட கொடி மரம் உள்ளது. மூலவர் ரத்னகிரீஸ்வரர் சன்னதியின் வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் நுழைவாயிலின் வலப்புறம் சனீஸ்வரர், உற்சவ விநாயகர், இடது புறம் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமண மண்டபம், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், நாகர், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை, சம்பந்தர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும், அடுத்து நடராஜர் சன்னதியும், வண்டுவார்குழலி (ஆமோதளநாயகி) சன்னதியும் உள்ளன. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் யமுனா சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. மூலவர் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வெளிச்சுற்றில் சாஸ்தா, பிராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி, சுரம் துர்த்த விநாயகர், சந்தான விநாயகர் ஆகியோர் உள்ளனர். மருதவுடையார்-சவுந்தரநாயகி சன்னதியும் இச்சுற்றில் உள்ளது. அதற்கு முன் நந்தி பலிபீடத்துடன், யாகசாலை, பராசரர் பூசித்த லிங்கம், காசி விசுவநாதர் உள்ளிட்டோர் உள்ளனர். 11 செப்டம்பர் 1974இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு உள்ளது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2811745" இருந்து மீள்விக்கப்பட்டது