"செய்யாறு (ஆறு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''செய்யாறு ஆறு''' [[தமிழ் நாடு| தமிழ் நாட்டின்‌‌‌‌‌‌‌]] [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] பாயும் ஒரு [[பருவ காலம்|பருவ கால]] [[ஆறு]] ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் [[ஜவ்வாது மலை]]யில் உருவாகும் இந்த ஆறு [[பாலாறு|பாலாற்றின்]] துணை ஆறு ஆகும்.
 
ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி மேற்குத் தெற்காகப் பாய்ந்து பின்பு [[செங்கம்]] அருகில் வடகிழக்காகத் திரும்பி திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள் [[போளூர்|போளூருக்கு]] அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள [[செண்பகத்தோப்பு அணை|செண்பகத்தோப்பு அணையிலிருந்து]] உருவாகும் நாக நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் ஆறும் ஆரணி அருகே இணைந்து கமண்டல நாக நதியாகி வாழைப்பந்தல் அருகில் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலத்தில் செய்யாறு ஆறாக வடக்குக் கிழக்காக ஓடி [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]] அடுத்த பழையசீவராம் எனும் ஊரில் [[பாலாறு]]டன் இணைந்து [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது.
 
திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும் குடிநீர்த் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான [[போளூர்]], [[ஆரணி]] மற்றும் [[செய்யாறு]] அமைந்துள்ளன. செய்யாறு நகரின் ஊடே பாய்வதால் இந்த ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா என்பது கேள்வியே. செய்யாறு நகரில் இந்த ஆற்றின் கரையில் [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] பாடல் பெற்ற ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த [[செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்]] அமைந்துள்ளது. சேயாறு (சேய்+ஆறு) என்பது காலப்போக்கில் திரிந்தும் செய்யாறு என பெயர்ப்பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.
3,727

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2812954" இருந்து மீள்விக்கப்பட்டது