எக்ஸ் பாக்ஸ் ஒன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 19:
எக்ஸ் பாக்ஸ் ஒன் என்பது [[மைக்ரோசாப்ட்]] நிறுவனத்தின் தயாரிப்பான எட்டாவது தலைமுறை [[எக்ஸ் பாக்ஸ்]] நிகழ்பட விளையாட்டு இயந்திரம்.
2013ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட இது [[எக்ஸ் பாக்ஸ் 360]]இன் அடுத்த தலைமுறையும் [[எக்ஸ் பாக்ஸ்]] பெயரில் மூன்றாம் தலைமுறை முனையமும் ஆகும். 2013 ஆம் ஆண்டு வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. சீனாவில் வெளியிடப்பட்ட முதல் எக்ஸ் பாக்ஸ் இதுவாகும். இது வெளிவந்த போது சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4 மற்றும் நிண்டெண்டோ நிறுவனத்தின் வை-யூ ஆகிய முனையங்களுக்கு நேரடி போட்டியாக இருந்தது.
 
முந்தைய தலைமுறை எக்ஸ் பாக்ஸ் 360 பயன்படுத்திய பவர்-பிசி தொழில் நுட்பத்தை விடுத்து இந்த முனையங்கள் எக்ஸ்86 எனப்படும் தொழில் நுட்பத்துக்கு மாறின. இந்த எக்ஸ்86 தொழில் நுட்பம் முதலாம் எக்ஸ் பாக்ஸ் முனையங்களில் முன்னர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேகக் கணிமையை முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் நேரடியாகப் பகிரும் வசதியும், மிக்சர் மற்றும் டிவிட்ச் போன்ற நேரலை விளையாட்டு வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பும் வசதியும் கொண்டிருந்தன. ஒரே இணைய இணைப்பில் உள்ள [[விண்டோஸ் 10]] கணினி மூலமாகவும் ஆட்டங்களை ஆட முடியும். மேலும் புளூ-ரே தட்டுக்களையும், ஒருங்கிணைந்த தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி மூலம் நேரலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் வசதிகள் இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்_பாக்ஸ்_ஒன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது