சி. சி. இராமசாமி படையாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2781623 Elavarasan96 (talk) உடையது. (மின்)
வரிசை 34:
 
== அரசியல் வாழ்க்கை ==
1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி [[வன்னியர்|வன்னியருக்காக]] ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு]] மற்றும் [[செங்கல்பட்டு]] மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த [[எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்]] [[காமன்வீல் கட்சி]]யினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]] என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] சட்டமன்றத் தேர்தலில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக [[திராவிட நாடு]] கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.
 
ராமசாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்கான]] [[சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952|தேர்தலில்]] நான்கு இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் [[த. பிரகாசம்]] தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு [[சி. ராஜகோபாலாச்சாரி]] (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளார் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். மஅமைச்சரவையில்1954ல் [[காமராஜர்]] முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுடன்]] இணைத்து விட்டார்.
 
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் [[சுதந்திராக் கட்சி]]யுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] தேர்தலில் [[திமுக]]வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980]] மற்றும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984]] பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக [[திண்டிவனம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமடைந்தார்.
 
"ராமசாமி படையாட்சியார் - தமிழினத்தின் பெரும் தலைவர்!"
 
--------------------
தமிழகத்தின் தலைவர்களில் முதன்மையானவர் ராமசாமி படையாச்சியார் ஆகும். மறைமலையடிகள், காமராஜர், முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட தலைவர்களை எல்லா தமிழர்களும் கொண்டாடுவது போன்று, ராமசாமி படையாச்சியாரும் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்பட வேண்டிய பெருந்தலைவர் ஆகும்.
 
இந்திய நாடு விடுதலை அடைந்து, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி கொண்டாடப்பட்ட காலத்தில், இந்தியா சந்தித்த முதல் தேர்தலிலேயே - அக்கட்சியை தோற்கடித்து, சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாமல் செய்தவர்.
 
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி உருவாகும் சூழலை முறியடித்து, தங்களது ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடக்க வழிவகுத்த இரு தலைவர்களில் ஒருவர் ராமசாமி படையாட்சியார் (மற்றொருவர் காமன்வீல் கட்சியின் மாணிக்கவேலு நாயகர்).
 
இன்று பலராலும் புகழப்படும் காமராஜர் ஆட்சியை உருவாக்கியவர் ராமசாமி படையாட்சியார் தான். அவர் இல்லாவிட்டால் தமிழ்நாட்டிற்கு காமராஜர் எனும் முதலமைச்சர் கிடைத்திருக்க மாட்டார் என்பது தான் வரலாறு.
 
------------------
"ராமசாமி படையாச்சியார்: சமூகநீதி காத்த பெருந்தலைவர்! "
 
ராமசாமி படையாச்சியாரின் மிகப்பெரிய பங்களிப்பு என அவர் சமூகநீயை காப்பாற்ற ஆற்றிய பங்களிப்பை குறிப்பிடலாம்.
 
 
குலக்கல்வித்திட்ட
தீர்மானம் தோற்கும் என்று கருதப்பட்ட சூழலில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக கொடுக்கூர் விஸ்வநாதன் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையும், ராமசாமி படையாச்சியாரின் ராஜதந்திரத்தாலும் - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆதரவையும் பெற்று, எதிர்ப்பு தீர்மானம் வெற்றி பெற்றது.
 
இந்த வரலாற்று நிகழ்வு தான் - தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து சமூகநீதியை நிலைநாட்டியது.
 
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த கொடுக்கூர் விஸ்வநாதன் அவர்களின் தீர்மானம் வெற்றி பெற்றதால் தான் ராஜாஜி பதவி விலகினார்.
 
ராஜாஜி பதவி விலகிய காரணத்தினால் தான் - காமராசர் முதலமைச்சர் ஆனார்.
 
அதே நேரத்தில், சமூகநீதிக்கு எதிரான ராஜாஜி அமைச்சரவையில் சேராமல் இருந்த ராமசாமி படையாச்சியார், பின்னர் காமராஜர் முதலமைச்சர் ஆனபோது அமைச்சரவையில் இணைந்தார்.
 
எல்லோராலும் போற்றப்படும் சத்துணவு திட்டத்தை இந்தியாவிற்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவரும் ராமசாமி படையாச்சியார் தான்.
 
எனவே, ராமசாமி படையாச்சியார் வன்னியர்களின் அடையாளமாக இருந்தாலும், அவர் ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவர் ஆகும்.
 
== அரசு விழா ==
"https://ta.wikipedia.org/wiki/சி._சி._இராமசாமி_படையாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது