திருமதி செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reference edited with ProveIt
வரிசை 47:
செல்வம் ஒரு இயந்திரம் பழுதுபார்ப்பவராக வேலை செய்கிறார். அவர் தனது குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூட்டிய ஒரே நபராக இருப்பதாலும், கடினமாக உழைக்க வேண்டியிருப்பதாலும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்கிறார், அவர் தனது தம்பி மற்றும் சகோதரி ஆகியோரின் கல்விககாக தனது படிப்பைக் கைவிட்டவர் ஆவார். இருப்பினும், அர்ச்சனாவை ஒரு கோவிலில் பார்த்தபின் அவர் காதலிக்கும்போது விதி ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அவரது திருமண திட்டத்திற்காக, அவர் ஒரு இயந்திரப் பொறியாளர் என்று ஒரு பொய்யைக் கூற நிர்பந்திக்கப்படுகிறார். திருமணத்திற்குப் பிறகு, உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது, அர்ச்சனா செல்வத்தை வெறுக்கத் தொடங்குகிறார், அவர் கல்வி கற்றவர் அல்ல, உண்மையில் ஒரு இயந்திரம் பழுதுபார்ப்பவர் என்பதால் அவள் ஆரம்பத்தில் அவனுடன் வாழ மறுக்கிறாள். ஆனால், இறுதியில் செல்வம் அவளிடம் வைத்திருக்கும் அன்பையும் அவனது குணத்தில் உள்ள நன்மையையும் புரிந்துகொண்டு அவனுடனான உறவை சரிசெய்ய முடிவு செய்கிறாள். காலப்போக்கில், செல்வம் தனது யாருக்காகத் தனது வீட்டையும், இயந்திரம் பழுதுபார்ப்பதற்கான கொட்டகை போன்றவற்றை இழந்தாரோ அந்த வளர்ப்பு தாய் பாக்கியம் என்பவரால் ஏமாற்றப்படுகிறார், செல்ல இடமில்லாததால், செல்வம் மற்றும் அர்ச்சனா நடைபாதையில் தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கிருந்து செல்வத்தின் நண்பர் சிவா அவர்களை அழைத்துச் செல்கிறார்.
 
அதைத் தொடர்ந்து, தம்பதியினர் சந்தோஷமாக வாழ்வதற்காக சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும், மகிழ்ச்சியான மற்றும் துன்பமான காலங்களிலும் ஒரே மாதிரி ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தார்கள் என்பதையும் கதையோட்டம் கொண்டு செல்கிறது. செல்வத்தின் நண்பர்களில் ஒருவரான நந்தினி அவருக்கும் அர்ச்சனாவுக்கும் அவர்களின் துன்பங்களில் இருந்து விடுபட உதவுவதோடு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவுகிறார். செல்வம் தனது கடின உழைப்பு, அர்ச்சனா மற்றும் நந்தினியின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் கார் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அந்தஸ்துக்கு வளர்கிறார். ஆனால், இறுதியில் நந்தினி செல்வத்துடன் தனது உறவை சந்தேகித்ததற்காகவும், அண்டை வீட்டாரின் முன்னால் தன்னை அவமதித்ததற்காகவும். அர்ச்சனாவின் தாயார் சிவகாமியைப் பழிவாங்குவதற்காக செல்வம் மற்றும் அர்ச்சனாவைப் பிரிக்க முடிவு செய்கிறார். செல்வத்தை அர்ச்சனாவிலிருந்து பிரிப்பதில் அவள் வெற்றி பெறுகிறாள், செல்வம் அர்ச்சனாவுக்கு எதிராக செல்லும்படி செய்வதன் மூலம் அவன் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொண்ட நல்ல ஒழுக்கங்களையும், அர்ச்சனா மீதான அவனது அன்பையும் இழக்கிறான். ஒரு கட்டத்தில், செல்வம் நந்தினியின் உண்மையான குணத்தையும், அவரிடமிருந்து அர்ச்சனாவைப் பிரிப்பதன் பின்னணியில் உள்ள அவளது நோக்கத்தையும் அறிந்துகொள்கிறான். அதற்காக, அவன் நந்தினியுடன் சண்டையிடுகிறான், இதற்கிடையில் நந்தினி மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறான். செல்வம் நந்தினியின் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத்தண்டனை அளிக்கிறது. செல்வம் மற்றும் அர்ச்சனா மீண்டும் ஒன்றிணைவாரா இல்லையா என்பதைக் கதை மேலும் கையாண்டது. சிறையில் இருந்து திரும்பிய பிறகு, செல்வம் அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கிறார், ஆனால் செல்வத்தால் துரோகம் செய்யப்பட்டதன் மூலம் நொந்த இதயத்துடன் அர்ச்சனா அவரை மன்னிக்கவோ அல்லது அவர் திருந்தியதையோ ஏற்றுக்கொள்ள ​​முடியவில்லை. கதை ஒரு எதிர் நிலை உச்சகட்டக் காட்சியைக் கொண்டு முடிகிறது. செல்வமும் அர்ச்சனாவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பிரித்து இருக்க நேரிடுகிறது. செல்வம் அனைத்து செல்வம் மற்றும் வாழ்க்கையை இழந்து நடைமேடைக்கே தனது வாழக்கை வந்து விட்ட தலைவிதியை நினைத்து வருந்துகிறார். "வழிநடத்துங்கள், மற்றவர்கள் வழிநடத்தட்டும். ஆனால், கவனமாக வழிநடத்துங்கள்" என்று ஒரு குறிப்புடன் கதை முடிகிறது.<ref name="வலைத்தளம்" /><ref name="Website">{{cite web |title=அர்ச்சனாவின் அழுகை முடிவுக்கு வரப்போகுதாமே? |url=https://tamil.filmibeat.com/television/thirumathi-selvam-ends-170304.html |website=filmibeat |publisher=filmibeat |accessdate=13 October 2019}}</ref>
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/திருமதி_செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது