இயன் போத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
சர்வதேச போட்டிகள்
அடையாளம்: 2017 source edit
வரிசை 100:
இவர் 21 தேர்வுப் போட்டிகளில் 1000 [[ஓட்டம் (துடுப்பாட்டம்)|ஓட்டங்கள்]] எடுத்ததுடன் 100 [[மட்டையாளர்]]களை வீழ்த்தியதன் மூலம் துடுப்பாட்ட வரலாற்றின் அதிவேகப் பன்முக ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் தேர்வுப் போட்டிகளில் ஒரே [[ஆட்டப் பகுதி (துடுப்பாட்டம்)|ஆட்டப் பகுதியில்]] 5 மட்டையாளர்களை வீழ்த்தி 100 ஓட்டங்கள் எடுத்த சாதனையை 5 முறை நிகழ்த்திய ஒரே வீரர் இவர் மட்டுமே. 15 பிப்ரவரி 1980ஆம் ஆண்டு [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்திய அணிக்கு]] எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது ஒரு போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்ததுடன் 13 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.
 
வறியோர்க்கு இயன் போத்தம் ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு அவருக்கு வீரப்பெருந்தகை பட்டம் வழங்கப்பட்டது. இவர் 2009ஆம் ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியின்]] புகழவையில் இடம்பெற்றார்.
 
இயன் போத்தம் செஷயரில் உள்ள எஸ்வாலில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஹெர்பர்ட் லெஸ்லி போத்தம் மற்றும் வயலட் மேரி ஆவர். இவரின் தந்தை இருபது ஆண்டுகள் விமானப் படையில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போதும் இவர் விமானப் படை வீரராக இருந்தார். இவரின் தாய் செவிலியர் ஆவார். போத்தமிற்கு இரண்டு வயதாக இருக்கும் போது இவரின் தட்ந்ஹைக்கு வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்ஸ் சில் பொறியாளராகப் பணி கிடைத்ததால் இவர்கள் யோவில்லிற்கு சென்றனர்.  இவரின் பெற்றோர் இருவருமே துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். இவரின் தந்தை வெஸ்ட்லேண்ட் அணிக்கும் தாய் ஷெர்போன் அணியிலும் விளையாடினர்.  பள்ளிக் காலத்திற்கு முன்பாகவே இவருக்கு துடுப்பாட்டம் மீது ஆர்வம் இருந்துள்ளது. பள்ளிக் காலத்தில் யோவிலில் உள்ள கிராமர் பள்ளியின் சுற்றுச் சுவரின் மீது ஏறி அங்கு மற்றவர்கள் துடுப்பாட்டம் விளையாடியதனைப் பார்த்துள்ளார். இவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது பந்தினை வைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்துள்ளார்.
 
தனது பள்ளிக் காலங்களில் ஒன்பது வயதாக இருக்கும் போது இவர் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
 
போத்தம் 102 தேர்வுத் துடுப்பாட்ட்ப் போட்டிகளில் விளாஇயாடியுள்ளாஅர். அதில் 5,200 ஓட்டங்களை 33.54 எனும் சராசரியோடு எடுத்தார். அதில் அதிக பட்சமாக 208 ஓட்டங்களை எடுத்தார். அதில் 14 நூறுகளும் அடங்கும். பந்துவீச்சில் 383 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். அவரின் பந்துவீச்சு சராசரி 28.40 ஆக இருந்தது. அதில் 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பது வீச்சு ஆகும். மேலும் ஒரு போட்டியில் 10இலக்குகளை நான்குமுறை வீழ்த்தியுள்ளார். மேலும் 120 கேட்ச் பிடித்துள்ளார்.
 
1976 முதல் 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குறைந்த பட்ச ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இவர் 2,113 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 79 ஓட்டங்கள் எடுத்ததே அதில் அதிகபட்சம் ஆகும். பந்துவீச்சில் 145 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும் 36 கேட்சுகளையும் பிடித்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் குறைந்த பட்ச ஓவர்கள் ஆகிய இரு போட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் குறைந்த பட்ச ஓவர்களில் சிறப்பாக விளையாடவில்லை. இருந்தபோதிலும் சில போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடியுள்ளார். அதில் ஆரு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுள்ளார். போத்தம் 1979, 1983 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிணக் கோப்பையில் விளையாடியுள்ளார். அதில் 22 போட்டிகளில் விளையாடியுள்ளாஅர். அதில் அ979 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளும் அடங்கும். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி அரை இறுதியிடன் வெளியேறிய அணியிலும் இவர் விளையாடினார்.
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருமுறை 1,000 ஓட்டங்களும் 100 இலக்குகளையும் கைப்பற்றிய 21 ஆவது சர்வதேச வீரர் ஆவார். இவர் மொத்தமாக 5,200 ஓட்டங்களையும் 383 இலக்குகளையும் கைப்பற்றினார்.மேலும் 1220 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இயன்_போத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது