"மகாபாரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அறம், பொருள், இன்பம், [[வீடுபேறு]] என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், [[பழவினை]]கள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான [[உரைநடை]]ப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 [[இலட்சம்]] சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது [[இலியட்]], [[ஒடிசி (இலக்கியம்)|ஒடிஸ்சி]] ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய ''தெய்வீக நகைச்சுவை'' (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
 
நவீன [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] முக்கிய நூல்களிலொன்றான [[பகவத் கீதை]]யும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. [[பாண்டு]], [[திருதராட்டிரன்திருதிராஸ்டிரன்]] என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
 
இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் [[வில்லிபுத்தூரார்]] ஆவார். [[பாரதியார்]] மகாபாரதத்தின் ஒரு பகுதியை [[பாஞ்சாலி சபதம்]] எனும் பெயரில் இயற்றினார். [[வியாசர் விருந்து]] என்ற பெயரில் [[ராஜாஜி|இராஜகோபாலாச்சாரி]] அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.<ref>[http://www.gita-society.com/pdf2011/mahabharata.pdf MAHABHARATA retold by C. Rajagopalachari]</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2816289" இருந்து மீள்விக்கப்பட்டது