கலங்கரை விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 15:
கலங்கரை விளக்கத்தில் பயன்படும் ஒளிமூலம் ''விளக்கு'' எனப்படும். இது மின் விளக்காகவோ [[எண்ணெய்]] விளக்குகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து வெளியாகும் ஒளி [[வில்லை (ஒளியியல்)|வில்லை]]களைப் பயன்படுத்திக் குவியச் செய்யப்படுகின்றன. தொடக்ககாலக் கலங்கரை விளக்கங்களில் திறந்த [[தீச்சுவாலை]]கள் பயன்பட்டன. பின்னர் இதற்குப் பதிலாக [[மெழுகுதிரி]]கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1781 ஆம் ஆண்டளவில், ஐரோப்பாவில், [[ஆர்கண்ட் விளக்கு|ஆர்கண்ட் பொட்திரி விளக்கு]]ம், [[பரவளைவுத் தெறிப்பி]]யும் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவில், 1810 ஆம் ஆண்டில் [[வின்ஸ்லோ லூயிஸ்]] என்பவர் ஆர்கண்ட் விளக்கு, பரவளைவுத் தெறிப்பி ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வரை, [[திமிங்கில எண்ணெய்]] பயன்பாட்டில் இருந்தது. 1850 இல் திமிங்கில எண்ணெய்க்குப் பதிலாக ஒருவகைத் தாவர எண்ணெயான, [[கோல்சா எண்ணெய்]] பயன்படுத்தப்பட்டது. ஆனால், அமெரிக்க உழவர்கள் இதனை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டாததால் அந்த ஆண்டே ''லார்ட் எண்ணெய்'' பயன்பாட்டுக்கு வந்தது. 1870 இல் அறிமுகமான மண்ணெய் 1880 ஆம் ஆண்டளவில் ஏறத்தாழ எல்லா கலங்கரை விளக்கங்களிலும் பயன்படத் தொடங்கியது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், [[மின்சாரம்|மின்சாரமும்]], [[கார்பைட்]] ([[அசட்டலீன்]]) வாயுவும், மண்ணெய்க்குப் பதிலீடுகள் ஆயின.
 
== தமிழ்ப் பண்பாட்டில் கலங்ரைகலங்கரை விளக்கம் ==
பண்டைய காலத்தில் தமிழர் கப்பல் போக்குவரத்திற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கங்களைக் கட்டியுள்ளார்கள். [[சோழர்]] காலத்து கலங்கரை விளக்கத்தை [[நாகப்பட்டிணம் மாவட்டம்]] [[கோடியக்கரை]]யில் காணலாம். "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்பதிகாரம் 6: 141) எனும் அடிகளால் பழந்தமிழ் நாட்டிலும் கலங்கரை விளக்கங்கள் இருந்ததென்பதை அறியலாம்.
{{விக்சனரி|கலங்கரை விளக்கம்}}
"https://ta.wikipedia.org/wiki/கலங்கரை_விளக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது