எலும்பு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பக்கத்தை '<ref>அறிவியல் களஞ்சியம் - தொகுதி 4 - தமிழ்...' கொண்டு பிரதியீடு செய்தல்
அடையாளங்கள்: Replaced கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
<ref>அறிவியல் களஞ்சியம் - தொகுதி 4 - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-4 - மே 1988 - பக்கம் 48.
சீராக எல்லா எலும்புகளினின்றும் கால்சியம் இழப்புத் தோன்றலாம். இந்நோய் நார்த் திசுப் பைகள் கொண்ட எலும்பு அழற்சி நோய் அல்லது வான் டெக்ளிங்ஹாசன் நோய் எனப்படும். இது தவிர ஒன்றோ அதற்கு மேற்பட்ட பைகளோ போலிப் புதுப் பெருக்குக் கட்டிகளோ தோன்றலாம். இரண்டாவதாக கூறப்பட்டவை தாடை எலும்புகளில் அதிகமாகக் காணப்படும் முதலில் எக்ஸ் கதிர்கள் பட அறிகுறிகள் மண்டை ஓட்டிலும் விரல் எலும்புகளிலும் தோன்றத் தொடங்கும். எக்ஸ் கதிர்ப் படத்தின் எலும்பு அடர்த்தி குறைவும் எலும்பு உறை சவ்வின் கீழ் அரிப்பும் காணப்படும் எலும்புகளிலும் மூட்டுகளிலும் இனம் காண முடியா வலியுடன் மருத்துவரை அணுகும் இந்நோயாளிகளின் நோய் சில நேரங்களில் மூட்டு வாதம் என்று தவறாக அடையாளம் கொள்ளப்படுவதும் உண்டு<ref>அறிவியல் களஞ்சியம் - தொகுதி 4 - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-4 - மே 1988 - பக்கம் 48.</ref> .
* '''மூட்டு வலி''' என்பது ஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்
கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது)
டெண்டிரைடிஸ் (தசைநார் பாதித்தல்)- முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும், மாடிப்படி ஏறி இறங்கும்போது மற்றும் சாயும்போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்
பேக்கர்ஸ் சிஸ்ட் - கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை போன்று வீக்கம் காணுப்படுதல். இந்த பை போன்ற சிஸ்ட் உடையும்போது வலி ஏற்பட்டு இந்த வலி முழுங்காலுக்கு கீழ் பரவும்
கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள் வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்
எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல் - இதனால் வலி மற்றும் முட்டியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது
சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள்
முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது
மூட்டுகளில் நோய் தொற்றுவது
மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்
இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். உதாரணம் ஈலியோடிபியல் சின்ட்ரோம் - அதாவது இடுப்பிலிருந்து மூட்டி பகுதிக்கு செல்லும் கயிறுபோன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்
எளிமையான பராமரிப்பு முறைகள்
மூட்டு வலிக்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அதிக உடற்சார்ந்த செயல்கள் வலியினை ஏற்படுத்தும். கீழ்கண்ட பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதால் வலியிலிருந்து மீளும் சாத்தியக்கூர்கள் அதிகம்.
வலியை அதிகப்படுத்தும் செயல்களை (உதாரணம் -பழுதூக்குதல்) தவிர்த்து ஓய்ந்திருத்தல்
வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம், முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.
கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீ’க்கங்களை குறைக்கலாம்
ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தை செலுத்தலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்க உதவியாய்யிருக்கும். இவ்வகை பாண்டேஜ்களை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்
மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்
*'''ஆர்த்ரைடிஸ் '''
ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் ஆகும். இவ்வார்த்தை உடலில் உள்ள 170 க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை குறிக்கும். இதனால் வலி, மூட்டுகளின் வளையும் தன்மை இழந்து விரைப்பான நிலை மற்றும் வீக்கம் (வீக்கம் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்) போன்றவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும்.
மூன்று பொதுவான வகை ஆர்த்ரைடிஸ் உள்ளன
ருமாடாய்ட் ஆர்த்ரைடிஸ்.
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்.
கெளட் (கீழ் வாதம்)
ஆர்த்ரைடிஸ்-ன் அறிகுறிகள்
காய்கறிகள் வெட்டுதல், சில பொருட்களை தூக்ககுதல், எழுதுவது, நாற்காலியிலிருந்து எழுந்திருப்பது, நடப்பது போன்ற செயல்களை செய்யும் போது ஏற்படும் அசைவுகளினால் மூட்டு இணைப்பு / எலும்பு இணைப்புகளில் ஏற்பட்டுகின்ற வலி அல்லது அழுத்தம் அதிகரித்தல்
இணைப்புகளில் வீக்கம், இணைப்புகள் வளையும் தன்மையை இழந்து விரைப்பாக காணப்படும். வீக்கம் கண்ட பகுதி சிவந்தும் வெப்பமாகவும் இருக்கும்
விரைப்புத்தன்மை குறிப்பாக காலைவேளைகளில்.
இணைப்புகள் (மூட்டுகள்) நன்கு செயல்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே மடிக்கவோ (அ) நீட்டவோ முடியும்.
இணைப்புகளில் உருக்குலைவு காணப்படும்
எடை குறைதல் மற்றும் சோர்வு.
குறிப்பிடமுடியாத காய்ச்சல்.
அசைவுகள் ஏற்படும்போது மூட்டுகளில் உராய்வு ஏற்படுவதால் உண்டாகும் சத்தம்.
ஆர்த்ரைடிஸ்-ஐ கையாள்வது எப்படி?
சரியான மேலாண்மை மற்றும் பயனளிக்கும் சிகிச்சையினை அளிப்பதன் மூலம் ஆர்த்ரைடிஸ் இருந்தாலும் நன்கு வாழ உதவிசெய்கிறது.
ஆர்த்ரைடிஸ்-ஐ அறிந்து அதனை உரிய சிகிச்சையின் மூலம் கையாள்வதால் ஆர்த்ரைடிஸ்-னால் ஏற்படக்கூடிய உருக்குலைவு (அ) இணைப்புகளில் ஏற்படும் வேண்டாத மாற்றங்கள் மற்றும் ஏற்படக்கூடிய சிக்கலை தடுத்து நிறுத்தலாம்.
இரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்-ரே போன்றவற்றை கொண்டு ஆர்த்ரைடிஸ்-ஐக் கண்காணிப்பது.
மருத்துவர் ஆலோசனைபடி மருந்தினை தவறாமல் எடுத்துக்கொள்ளுதல்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல்.
மருத்துவர் அறிவுரையின் பேரில் தேவையான உடற்பயிற்சியினை தவறாமல் மேற்கொள்ளுதல்.
வேலைகளை திட்டமிட்டு செய்தல், போதுமான ஓய்வு எடுத்தல், மனதையும் உடலையும் அமைதியாக வைக்கும் முறைகளை மேற்கொள்ளுதல், உடற்பயிற்சி தவறாமல் செய்தல், சோர்வு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை அணுகவிடாமல் காத்தல்
*'''கெளட்''' (கீல் வாதம்)
கெளட் என்பது அதிக சத்துள்ள உணவு உட்கொள்வது மற்றும் மது அருந்துவதுதோடு சம்மந்தமுடையது. இந்நிலையில், இரத்தத்தில் இயல்புக்கு மாறாக அதிக அளவில் யூரிக் அமிலம் காணப்படும். திரவநிலையில் உள்ள இந்த அமிலம் உறைந்து மூட்டு இணைப்பு பகுதிகள் (பெரும்பாலான நேரங்களில் காலின் பெருவிரலில்) மற்றும் சிலவேளை சிறுநீரகங்களிலும் படிகங்களாக/கற்களாக தோன்றுகின்றன.
கெளட்டில் என்ன நேரிடும்?
யூரிக் அமிலம் என்பது சிறுநீரில் உள்ள ஒரு கழிவுப் பொருள். இது சிறுநீரகங்கள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இந்த அமிலம் வெளியேற்றப்படுவது குறையும்போதோ அல்லது இவ்வமிலம் அதிகளவில் உற்பத்தியாவதினாலோ இதின் அளவு இரத்தத்தில் உயர்கிறது. இந்நிலையில் இவ்வமிலம் உறைந்து படிகங்களாக / கற்களாக ஆங்காங்கே (இணைப்புகளிலும்) சேமிக்கப்படுகிறது. அவ்வாறு ஆங்காங்கே சேமிக்கப்பட்டுள்ள அமிலங்களை நமது உடலில் உள்ள நோய் எதிர்க்கும் செல்கள் விழுங்கிய பின்னர், வலியினை ஏற்படுத்தும் பொருட்களை இணைப்பு பகுதிகளில் வெளியிடுகின்றன. இப்பொருட்களே இணைப்புப் பகுதிகளில் சிதைவுகளை / பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது.
*'''கழுத்தெலும்பு அழற்சி''' (செர்விகல் ஸ்பாண்டைலோஸிஸ்)
இயற்கைக்கு மாறான வகையில் கழுத்துப்ப்குதியில் ஸ்பையின் எலும்பில் ஏற்படும் வளர்ச்சி, எலும்பு நசிவுறுதல், முன் பிதுக்கம் மற்றும் முதுகெலும்புகளுக்கு இடையில் மெத்தைபோன்று அமைந்துள்ள (குறுத்தெலும்புத்) தட்டுகளில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து சேருவது போன்றவற்றை கழுத்தெலும்பு அழற்சியில் கண்டறியலாம். நடுத்தர மற்றும் வயது சென்ற நபர்களில் கழுத்தெலும்பின் கூர்முனையில் சிதைவூறு மாற்றங்கள் காண்பது பொதுவான ஒன்று. இது எந்த ஒரு அறிகுறியையும் தோற்றுவிப்பதில்லை. கழுத்தெலும்புகளுக்கு இடையில் உள்ள மெத்தை போன்ற வட்டத் தட்டுகள் நரம்புகளை அழுத்தும் போது கழுத்தெலும்பு அழற்சிக்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. பொதுவாக 5-வது 6-வது கழுத்தெலும்புகளுக்கு இடையில் மற்றும் 6-வது 7-வது கழுத்தெலும்புகளுக்கு அல்லது 4-வது 5-வது கழுத்தெலும்புகளுக்கு இடையில் உள்ள மெத்தைபோன்ற வட்டத்தட்டுகள் பாதிக்கப்படுகிறது.
அறிகுறிகள்
ஒரு தனிநபரில் கழுத்துப் பகுதி எலும்புகளில் சிதைவூறு மாற்றங்கள் அதிகரிக்கும்போது அதற்கான எந்த ஒரு அடையாளத்தையோ அல்லது அசெளகரியத்தையோ உணர முடியாமல் இருக்கலாம். கழுத்துப்பகுதி நரம்பு நீளும் போதோ அல்லது அழுத்தப்படும் போதோ அடையாளங்கள் தோன்றலாம். அவை
கழுத்து வலி, வலியானது தோள்பட்டை மற்றும் புஜம் (கை) போன்ற பகுதிகள் வரை (பரவும்) உணரப்படும்.
கழுத்து விரைப்பாக காணப்படும். தலையின் அசைவுகள் குறையும்.
தலைவலி, குறிப்பாக தலையின் பின்பகுதியில் (பின் தலைவலி).
தோள்பட்டை, புஜம் அல்லது முன்கை போன்ற பகுதிகளில் சத்தம், எரிச்சல் அல்லது உணர்வு இழத்தல் ஏற்படும்.
குமட்டல், வாந்தி மற்றும் தலைசுற்றல்.
தோள்பட்டை புஜம், கைகள் போன்ற பகுதிகளில் தசை பெலவீனமாதல் அல்லது தசைவீணாகுதல்.
கால்கள் பலவீனமடைதல் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் மலம் கழித்தல் போன்ற செயல்களின் கட்டுப்பாடு இழத்தல் (அதாவது தண்டுவட நரம்புகள் அழுத்தப்படும்போது).
கையாளும் முறை
சிகிச்சையின் குறிக்கோள்
நரம்பு அழுத்தம் அடைவதால் ஏற்படும் வலி மற்றும் பிற அடையாளங்களை குறைப்பது / நீக்குவது.
தண்டுவடம் மற்றும் தண்டுவட நரம்பு வேர்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுத்து வராமல் காத்தல்.
சிதைவு மாற்றங்கள் அதிகரிக்காமல் தடுத்து காத்தல்.
மேற்கூறியவைகளை கீழ்க்காணும் முறைகளை மேற்கொள்வதின் மூலம் நிறைவேற்றலாம்
கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளை வலிமையாக்க உடற்பயிற்சி செய்வது பயனளிக்கக்கூடியது. ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் உடலியக்கப்பயிற்சி துறை வல்லுநர்களிடம் அப்பயிற்சியினை கற்று, வீடுகளில் தவறாமல் ஒழுங்காகச் செய்வது அவசியம்.
கழுத்துப் பட்டை (செர்வைகல் காலர்) அணிவதினால், கழுத்தின் இயக்கத்தை குறைத்து வலியினை குறைக்கலாம் / போக்கலாம்.
மூட்டுவலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்)
மூட்டுவலி என்பது மூட்டுக்களில் வீக்கம் ஏற்படுதலாகும். இவ்வலி, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும். ஆரம்பத்தில், உடலின் சிறிய மூட்டுக்களில் மாத்திரம் (அதாவது விரல் மூட்டுகள்) தொடங்கி, பின்னர் மற்ற மூட்டுக்களும் (கை மணிகட்டு, கால் முட்டி, விரல் இணைப்புகள் இந்நோயால் பாதிக்கப்படுகிறது.
காரணங்கள்
ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் வருவதற்கான குறிப்பான காரணம் இல்லை. இது மரபு, சுற்றுச்சூழல் மற்றும் ஹார்மோன் போன்ற காரணிகளின் கூட்டுச்செயலினால் நோய்தடுப்பாற்றலில் மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, நமது உடலில் உள்ள நோய்தடுப்பு மண்டலமானது தமது உடலில் உள்ள செல்களை தன்னுடையவைகள் என்று இனங்காணும் தன்மையினை இழக்கிறது. இதன் விளைவாக, தன் சொந்த செல்களையே அழிக்கின்றன. இவ்வாறு, மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டு பின்னர் மெதுவாக மூட்டுக்களை அழித்து, உருமாற்றத்தினை ஏற்படுத்துகிறது.
மரபுக்காரணிகள் நோயின் பாதிப்புத் தன்மையினை அதிகரிக்கிறது. ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் கும்பங்களில் வழிவழியாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது.
சுற்றுச்சூழல் காரணிகள் நோய் பாதிப்பு ஏற்பட சாத்தியமுள்ள நபர்களில் இந்நோய் தொடங்குவதை அதிகரிக்கிறது.
ஹார்மோன் காரணிகள் நோய் பெருகுவதை அதிகரிக்கிறது அல்லது குறைக்கிறது. இந்நோய், பெண்களில் மாதவிடாய் நிற்பதற்கு முந்தின காலங்களில் அதிகளவு ஏற்படுகிறது.
இடர்காரணிகள்
வயது - இந்நோய் எந்தவயதிலும் ஏற்படக்கூடிய நிலையில் இருந்தாலும், 20-40 வயதுகளில் அதிகளவில் ஏற்படுகிறது.
பாலினம் - பெண்கள், மாதவிடாய் நிற்பதற்கு முந்தின காலங்களில் இந்நோயின் பாதிப்பானது ஆண்களை விட பெண்களில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
கையாளும் முறை
கையாள்வதின் நோக்கம்
மூட்டு வீக்கம் மற்றும் வலியினை குறைப்பது.
நோய் பெருக்கத்தை தாமதிப்பது.
மூட்டுக்களின் இயக்கத்தை குறைத்து பாதுகாப்பது மற்றும் மூட்டுகளில் ஏற்படும் உருமாற்றத்தினை தடுத்துக்காப்பது.
இவைகளை சரீர மற்றும் மருத்துவ ரீதியான நோய்சிகிச்சை முறையினை இணைத்து கையாள்வதின் மூலமும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையினை மேற்கொண்டும் அடையலாம்.
உடல்ரீதியான சிகிச்சை முறை
ஓய்வு எடுப்பதின் மூலம் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் தசைபிடிப்பு போன்றவற்றை குறைக்கலாம். மூட்டுகளில் தேவையற்ற அசைவுகளை குறைத்து ஓய்வு தருவதன் மூலம் வலியை குறைக்கலாம். ஊன்று கோல்கள், நடைபயிற்சி உபகரணங்கள் போன்றவைகளை பயன்படுத்தி நோயுற்ற மூட்டுகளைத் தாங்க வேண்டும்.
வலி மற்றும் வீக்கம் மேலும் அதிகரிக்காமல் காக்க, உடற்பயிற்சி செய்வது பயனளிக்கக் கூடிய முக்கிய பகுதி ஆகும். இம்முறையினை மருத்துவருடைய ஆலோசனையின் படி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட கால்மூட்டுகளில் ஏற்படக்கூடிய அழுத்தத்தினை குறைக்க, உடல் எடையை சரியாய் பேணிக்காப்பது அவசியம்
 
<nowiki>[[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]</nowiki>
</ref>சீராக எல்லா எலும்புகளினின்றும் கால்சியம் இழப்புத் தோன்றலாம். இந்நோய் நார்த் திசுப் பைகள் கொண்ட எலும்பு அழற்சி நோய் அல்லது வான் டெக்ளிங்ஹாசன் நோய் எனப்படும். இது தவிர ஒன்றோ அதற்கு மேற்பட்ட பைகளோ போலிப் புதுப் பெருக்குக் கட்டிகளோ தோன்றலாம். இரண்டாவதாக கூறப்பட்டவை தாடை எலும்புகளில் அதிகமாகக் காணப்படும் முதலில் எக்ஸ் கதிர்கள் பட அறிகுறிகள் மண்டை ஓட்டிலும் விரல் எலும்புகளிலும் தோன்றத் தொடங்கும். எக்ஸ் கதிர்ப் படத்தின் எலும்பு அடர்த்தி குறைவும் எலும்பு உறை சவ்வின் கீழ் அரிப்பும் காணப்படும் எலும்புகளிலும் மூட்டுகளிலும் இனம் காண முடியா வலியுடன் மருத்துவரை அணுகும் இந்நோயாளிகளின் நோய் சில நேரங்களில் மூட்டு வாதம் என்று தவறாக அடையாளம் கொள்ளப்படுவதும் உண்டு<ref>அறிவியல் களஞ்சியம் - தொகுதி 4 - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-4 - மே 1988 - பக்கம் 48.</ref> .
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது