விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 15:
'''கம்சியா மகால்'''<br />
37, சேர் பொன். இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம்
 
=== வருகை ===
 
'''கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணதிற்கு வருவதற்கான வழிகள்'''
* இலகு வழி:- கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து கொழும்பு புறக்கோட்டைக்கு (pettah-பெற்றா அல்லது சிங்களத்தில் பிற்றக்கொட்டுவ) எந்நேரமும் தாராளமான பேருந்து சேவைகள் உள்ளன. புறக்கோட்டைக்கு சென்று அங்கு
:# காலையிலிருந்து சுமாராக இரவு 8 மணிவரை யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவைகள் இருக்கும்.
:# அல்லது புறக்கோட்டையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்பாணத்திற்கான பின்வரும் நேரங்களில் புறப்படும் தொடருந்துகளில் வரலாம்.
::* 05:45:00 A.C. - INTERCITY - A.C. - INTERCITY
::* 06:35:00 YAL DEVI - LONG DISTANCE
::* 11:50:00 UTTARA DEVI - A.C. - INTERCITY
::* 15:55:00 SRI DEVI - INTERCITY
::* 20:30:00 NIGHT MAIL TRAIN - NIGHT MAIL TRAIN
 
* வேறு வழி:- கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் கொழும்பு-புத்தளம் வீதிக்கு வந்தால் அவ்வீதியால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து ஒன்றில் யாழ்ப்பாணம் வரலாம். (இரவு 9 மணி வரையில்)
 
* இன்னொரு வழி:- புறக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து மொரட்டுவ செல்லும் (காலி வீதியால் (Galle Road-கோல் ரோட்) செல்லும்) பேருந்தில் ஏறி வெள்ளவத்தையில் இறங்கி அங்கு யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துக்கான பதிவுகளை மேற்கொண்டு இரவு 8 மணியளவில் வெள்ளவத்தையில் இருந்து புறப்படும் பல்வேறு தனியார் பேருந்து சேவைகளில் பயணம் செய்து யாழ்ப்பாணம் வரலாம்.
 
'''யாழ்ப்பாண நகரத்தில் இருந்து தங்குமிடம் வந்தடைதல்'''
* யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் என்பவற்றில் இருந்து தங்குமிடத்திற்கான தூரம் சுமார் 2 கிலோமீட்டர் ஆகும். ஆகவே தங்குமிடத்தை வந்தடைவதற்கான சிறந்த வழி முச்சக்கரவண்டிப் பயணமே. முச்சக்கரவண்டிச் சேவைகள் இரவு-பகல் இருக்கும். முச்சக்கர வண்டியில் ஏறி பலாலி வீதி பரமேஸ்வரா சந்திவரை என்று கூறி வந்தால் அங்கிருந்து கிழக்குப் பக்கம் செல்லும் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் இடக்கைப் பக்கம் தாங்கும் விடுதியான "Bright Inn" உள்ளது.
 
== திகதி ==