"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

வாழ்த்து!
(வாழ்த்து!)
புதுப்பயனருக்கான போட்டியில் பரிசு பெற்றோர் பட்டியலில் எனது பெயர் உள்ளது ஆனால் எவ்வாறு பரிசு வழங்கப்படும் என்ற விவரங்கள் இல்லை... பரிசுகள் கொடுத்தாகிவிட்டதா?? எங்கு விவரங்களை கண்டறிவது [[பயனர்:பிரயாணி|பிரயாணி]] ([[பயனர் பேச்சு:பிரயாணி|பேச்சு]]) 10:22, 16 அக்டோபர் 2019 (UTC)
: பரிசுகள் 19ஆம் திகதி மாலை நிகழ்வில் வழங்கப்படும். திட்டப்பக்கத்தில் இலங்கை வந்துள்ள பயனர்களின் பட்டியல் உள்ளது. அவர்களில் எவராவது உங்கள் ஊருக்கு அருகில் இருந்தால் அவர்களிடம் உங்களிற்கான சான்றிதழைக் கொடுக்க முடியும். அல்லது தபாலில் அனுப்ப முடியும். உங்களுக்கான பரிசுக் கூப்பன் (Amazon eGift Card) 19ஆம் திகதி அல்லது வரும் வாரத்தில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். தயவுசெய்து kosaran@gmail.com எனும் எனது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளுங்கள். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 14:00, 17 அக்டோபர் 2019 (UTC)
 
==வாழ்த்துகள்==
திட்டமிட்டபடி தமிழ் விக்கிப்பீடியாவின் 16ஆம் ஆண்டு நிகழ்வுகள் யாழில் நடப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆவல் இருந்தும், சில காரணங்களால் கலந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு கவலை இருப்பினும், நிகழ்வுகள், கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நிகழ்வதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நிகழ்வில் கலந்துகொள்ளும் இலங்கை, இந்திய தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் மகிழ்வாகவும், பயன்மிக்கதாகவும் இந்த நிகழ்வை நடத்த வாழ்த்துகிறேன். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 09:54, 18 அக்டோபர் 2019 (UTC)
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2817430" இருந்து மீள்விக்கப்பட்டது