"நெற்ஃபிளிக்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,801 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
==உரிமையாளர்கள்==
2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி, நெட்ஃபிக்ஸின் பங்குகளை முக்கியமான நிறுவன முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர். அவற்றுள் தி கேப்பிட்டல் குழு, தி வான்கார்ட் குழு, பிளாக்ராக் ஆகியவை அடங்கும் .
 
==நிதி நிலை==
2018 ஆம் வருட நிதியாண்டில், நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 1.21 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பதிவுசெய்ததுள்ளது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 15.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்நிறுவனத்தின் முந்தைய நிதிச் சுழற்சியை விட சுமார் 116 சதவிகிதம் அதிகமாகும். நெட்ஃபிக்ஸின் பங்குகள் 2018 ஆம் ஆண்டில் ஒரு பங்குக்கு $ 400 க்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது. இதுவே இந்நிறுவனத்தின் மிக உச்சகட்ட விலையாகும். மேலும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஜூன் 2018 இல் 180 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பை எட்டியது. பார்ச்சூன் 500 வெளியிட்ட, வருவாயைக் கொண்டு மதிப்பிடப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியல் 2018 இல் நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 261 வது இடத்தைப் பிடித்தது.
 
[[பகுப்பு:மின் வணிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818048" இருந்து மீள்விக்கப்பட்டது