"நெற்ஃபிளிக்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
 
நெட்ஃபிக்ஸ் தொடக்கக் காலத்தில் அஞ்சல் வழியாகத் திரைப்பட இறுவட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு அனுப்பும் மற்றும் விற்பனை செய்யும் சேவையினைச் செய்து வந்தது. ஆனால் நிறுவனம் நிறுவப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு ஹேஸ்டிங்ஸ் விற்பனையைக் கைவிட்டுவிட்டு இறுவட்டு வாடகைக்கு விடும் வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். நெட்ஃபிக்ஸ் 2010 இல் தனது வணிகத்தை விரிவுபடுத்தியது, இறுவட்டு மற்றும் ப்ளூ-ரே வாடகை வணிகத்தை நடத்திக்கொண்டே ஒலியொளியோடை வசதியையும் அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவில் விரிவடையத் தொடங்கியது. கனடா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் ஆகிய இடங்களில் முதலில் விரிவுபடுத்தினர். நெட்ஃபிக்ஸ் 2012 ஆம் ஆண்டில் தயாரிப்புத் துறையில் நுழைந்தது. நெட்பிளிக்ஸின் முதல் தயாரிப்பு ​ லில்லிஹாமர் தொடராகும்.
 
==ஆரம்ப வரலாறு==
நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ஏப்ரல் 14, 1998 அன்று, உலகின் முதல் இணைய இறுவட்டு வாடகைக் கடையாக தொடங்கப்பட்டது. ஆகம்பத்தில் 30 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர். 925 தலைப்புகள் மட்டுமே கிடைத்தது, ஆனால் அந்தக்காலக்கட்டத்தில் அச்சிடப்பட்ட இறுவட்டுகளின் முழு எண்ணிக்கையே ஏறத்தாழ இவ்வளவு தான்.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது போட்டியாளரான பிளாக்பஸ்டரின் விலை மற்றும் கால அவகாசத்தை ஒட்டியே தமது வாடகை மற்றும் கால அவகாசத்தை நிர்ணயம் செய்தனர்.
 
==உரிமையாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2818067" இருந்து மீள்விக்கப்பட்டது