முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *திருத்தம்*
→‎முடியுருத்தமனி: *விரிவாக்கம்*
வரிசை 23:
மூளை உட்பட உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஆக்சிசன் கலந்த குருதி சீராக எடுத்துச் செல்லப்படுவதற்கு இதயத்தின் தசையின் சுருங்கி விரியும் தொழிற்பாடு அவசியமானது. எனவே அத்தசைகளுக்கு ஆக்சிசன் மற்றும் ஊட்டக்கூறுகளை வழங்கும் முடியுருக் குருதிச்சுற்றோட்டம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். முடியுருக் குருதிச்சுற்றோட்டம் தடைப்படின் இதயத்தின் தசைகள் ஆக்சிசன் பெற்றுக்கொள்வது அற்றுப்போய் அவை நலிவுறும் வேளையில் [[இதயத்தசை இறப்பு]] ([[மாரடைப்பு]]) ஏற்படுகின்றது.
 
== முடியுரு நாடி ==
== முடியுருத்தமனி ==
 
இடது, வலது என இரு முடியுருத்தமனிகள்முடியுரு நாடிகள் [[இதய அடைப்பிதழ்|பெருநாடி அடைப்பிதழுக்குச்]] சற்று மேலே [[பெருந்தமனி]]யின் ஆரம்பப் பகுதியான ஏறு பெருநாடியில் இருந்து புறப்படுகின்றன.<ref name="Ellis">{{cite book|last1=Ellis |first1=Harold|title=Clinical
anatomy||year=2006|isbn=9781405138048|publisher=Blackwell Publishing|accessdate=15 October 2019|page=33}}</ref> பெருநாடி அடைப்பிதழ்களின் ஒவ்வொரு இதழ்களும் நாடியின் சுவர்களும் சேர்ந்து மூன்று குழிவுகளை உருவாக்குகின்றன. இவை பெருநாடிக் குழிவுகள் (aortic sinus) அல்லது வல் சல்வாவின்வல்சல்வாவின் குழிவுகள் எனப்படுகின்றன. இடது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து இடது முடியுரு நாடியும் முற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து வலது முடியுரு நாடியும் தோன்றுகின்றன. வலது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து முடியுருநாடி தோன்றாமையால் அது முடியுருநாடியிலாக் குழிவு எனப் பெயர் கொண்டுள்ளது.<ref name="Grays">{{cite book |title=Gray's Anatomy|last= Standring|first=Susan |authorlink= |year=|publisher=Elsevier Limited |edition=40|location= |isbn=978-0-8089-2371-8|page= |chapter=Coronary arterial supply |pages= |accessdate=October 17, 2019 |url=}}</ref> பெருநாடிக் குழிவுகளின் பெயரீட்டில் வேறுபாடுகள் உள்ளது. இவை இடது பிற்புறப் பெருநாடிக் குழிவு, முற்புறப் பெருநாடிக் குழிவு, வலது பிற்புறப் பெருநாடிக் குழிவு என்று மரபு வழிப் பெயரிட்டாலும் இடது, வலது, பிற்புறக் குழிவுகள் என்று சில மூலங்களிலும் பெயரிடப்பட்டுள்ளது.<ref name="Ho1">{{cite journal |last1=Ho |first1=SY |title=Structure and anatomy of the aortic root. |journal=European journal of echocardiography : the journal of the Working Group on Echocardiography of the European Society of Cardiology |date=January 2009 |volume=10 |issue=1 |pages=i3-10 |doi=10.1093/ejechocard/jen243 |pmid=19131496}}</ref>
 
இடது முடியுரு நாடியில் இருந்து இடது முற்புற இறங்கு நாடியும் சுற்றுவளை நாடியும் கிளையாகப் பிரிகின்றன. இவை இதயத்தின் இடது மேலறை, கீழறைகளுக்கும் கீழறைப் பிரிசுவருக்கும் குருதியை வழங்குகின்றன. சுற்றுவளை நாடி வலது முடியுரு நாடியின் சிறுகிளைகளுடன் இணைந்து கொள்கின்றது. முற்புற இறங்கு நாடியின் (வேறு பெயர்: முற்புறக் கீழறையிடை நாடி) சிறுகிளைகள் வலது முடியுரு நாடியின் பிற்புற இறங்கு நாடி கிளைகளுடன் பொருந்துகின்றன. இவை முடியுரு நாடிப் பின்னல்கள் அல்லது முடியுரு தமனிப் பின்னல்கள் ஆகும். இந்தத் நாடிப் பின்னல்கள் இன்றியமையாதது ஆகும். முதன்மையான நாடியில் அடைப்பு ஏற்பட்டு, குருதி ஊட்டக்குறை ஏற்படும்போது வேறொரு நாடி குருதி வழங்குதலை முழுவதுமாக எடுத்துக்கொள்கின்றது. இவ் இயக்கத்துக்கு நாடிகளில் உள்ள அழுத்த வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கின்றது. உயர் அழுத்தம் காரணமாக நாளடைவில் புதிதாகத் திறந்து விடப்பட்ட கிளை நாடியின் பருமன் கூடி விரிவடையும். எனினும் இதயத்தில் உள்ள நாடிப் பின்னல்கள் பெரும்பாலும் தொழிற்பாடு குன்றிய நிலையில் இருக்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது