அட்டிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 28:
 
அட்டிலாவின் வரலாற்றை நிறுவுவது என்பது சவால் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில் அட்டிலாவை பற்றிய முழுமையான வரலாற்று ஆதாரங்கள் [[கிரேக்க மொழி|கிரேக்க]] மற்றும் [[லத்தீன்]] மொழிகளில் அட்டிலாவின் எதிரிகளால் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. அட்டிலாவின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் பல்வேறு சான்றுகளை அட்டிலாவின் வாழ்க்கையைப்பற்றி விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அதில் சிறிதளவே எஞ்சியுள்ளது.{{r|Lebedynsky:Report|p=25}} பைசாந்தியப் பேரரசின் தூதுவர் மற்றும் வரலாற்றாளரான பிரிஸ்கஸ் கிரேக்க மொழியில் எழுதினார். அட்டிலாவின் கதையில் இவர் ஒரு சாட்சியாகவும் மற்றும் பங்கேற்பாளராகவும் இருந்துள்ளார். கி. பி. 449 இல் ஹூனர்களின் அவைக்கு இரண்டாம் தியோடோசியசால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவில் இவர் ஒரு உறுப்பினராக இருந்தார். இவர் தனது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வெளிப்படையாக ஒரு சார்பு உடையவராக இருந்தார். ஆனால் இவரது எழுத்துக்கள் அட்டிலாவின் வாழ்க்கையை பற்றிய செய்திகளை கூறும் முக்கியமான ஆதாரமாக உள்ளன. அட்டிலாவின் உருவ அமைப்பைப் பற்றி பதிவிட்ட ஒரே ஒரு அறியப்பட்ட நபர் இவர்தான். கி. பி. 430 முதல் 476 வரையிலான பிந்தைய ரோமப் பேரரசின் வரலாற்றை 8 புத்தகங்களாக இவர் எழுதினார்.{{r|Given}}
 
தற்போது பிரிஸ்கஸின் வரலாற்றில் மிகச் சிறிதளவே நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதனை ஆறாம் நூற்றாண்டு வரலாற்றாளர்களான புரோகோபியஸ் மற்றும் ஜோர்டானேஸ் ஆகியோர் விரிவாக தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.{{r|Rouche|p=413}} குறிப்பாக ஜோர்டானேஸ் தனது ''கெட்டிகா'' (கோத்களின் தோற்றம் மற்றும் செயல்கள்) என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் பிரிஸ்கஸின் வரலாற்று நூலைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. ஹூன பேரரசு மற்றும் அதன் அண்டை நாடுகளை பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள மிக முக்கியமான ஆதாரமாகவும் இந்த நூல் விளங்குகிறது. அட்டிலாவின் இறப்பிற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அட்டிலாவின் மரபு மற்றும் ஹூன மக்களைப் பற்றி இவர் விளக்கியுள்ளார். பேரரசர் ஜஸ்டினியனின் ஆளுநரான அதே காலத்தில் வாழ்ந்த மார்செலினஸ் கோமேஸ் என்பவரும் ஹூனர்கள் மற்றும் கிழக்கு ரோமப் பேரரசுக்கும் இடையில் இருந்த தொடர்பை பற்றி விளக்கியுள்ளார்.{{r|Lebedynsky:Report|p=30}}
 
=உசாத்துணைகள்=
"https://ta.wikipedia.org/wiki/அட்டிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது