இட்சுகுசிமா கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{nihongo|'''இட்சுகுசிமா சிற்றாலயம்'''|厳島神社|Itsukushima-jinja}} என்பது இட்சுகுசிமா தீவில் அமைந்துள்ள ஒரு சின்டோ சிற்றாலயம் ஆகும். இத்தீவு அங்குள்ள மிதக்கும் தோரீ வாயிலுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றது. இது சப்பானின், இரோசிமா மாகாணத்தில் உள்ள அட்சுகைச்சி நகரத்தில் உள்ளது. இந்தச் சிற்றாலயத் தொகுதி யுனெசுக்கோவின் உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இத்தொகுதியில் உள்ள பல கட்டிடங்களைச் சப்பானிய அரசாங்கம் தேசியச் செல்வங்களாக அறிவித்துள்ளது.
 
இட்சுகுசிமா சிற்றாலயம் சப்பானின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதன் மிதக்கும் வாயிலுக்கும், மிசென் மலையின் புனிதமான சிகரங்களுக்கும், விரிந்த காடுகளுக்கும், கடற் காட்சிகளுக்கும் இது பெயர் பெற்றது. சிற்றாலயத் தொகுதி ஒன்சா சிற்றாலயம், செசா மரோடோ-சிஞ்சா ஆகிய முக்கியமான கட்டிடங்களுடன் மேலும் 17 கட்டிடங்களையும் அமைப்புக்களையும் கொண்டதுஉள்ளடக்கியது.
 
== வரலாறு ==
இது 593 ஆம் ஆண்டு சுயிக்கோ காலத்தில் சயேக்கி குராமோட்டா என்பவரால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது. ஆனாலும் தற்போதைய சிற்றாலயம் முன்னணிப் போர்த் தலைவனான தைரா நோ கியோமோரி என்பவனால் கட்டப்பட்டது எனபது பரவலான நம்பிக்கை. 1168 இல் இவன் அக்கி மாகாணத்தின் ஆளுனனாக இருந்தபோது இச்சிற்றாலயக் கட்டிடங்களைக் கட்டுவதற்குப் பெருமளவு உதவியதாகத் தெரிகின்றது.
 
[[பகுப்பு: சப்பானிய வழிபாட்டிடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இட்சுகுசிமா_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது