நருமதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,752 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பேரெல்லி என்னுமிடத்திற்கு சற்று கீழ் ஆக்ரா- மும்பய் சாலையை கடந்ததும் [[மண்டலேஷ்வர்|மண்டலேசுவர்]] சமவெளியை அடைகிறது. இரண்டாவது வடிநிலத்தின் நீளம் 180 கிமீ, தெற்கில் இதன் அகலம் 65 கிமீ வடக்கில் இதன் அகலம் 25 கிமீ. இரண்டாவது பள்ளத்தாக்கு சகேசுவர் தரா அருவியால் துண்டிகப்படுகிறது. இரண்டாவது வடிநிலத்தின் முதல் 125 கிமீ தூரத்துக்கு மர்கரி அருவி வரை ஆழம் குறைவான ஆற்றில் பாறைகள் மீது மோதி நீர் வேகமாக சற்று மேடான [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]]வில் இருந்து தாழ்வான நிலப்பகுதியான குசராத் சமவெளிக்கு வருகிறது.
 
மக்ரைய்க்கு கீழே நருமதை குசராத் மாநிலத்தின் [[வதோதரா மாவட்டம்|வதோரா மாவட்டத்தையும்]] [[நர்மதா மாவட்டம்|நர்மதா மாவட்டத்தையும்]] அடைந்து பின் வண்டல் நிறைந்த வளமான [[பரூச் மாவட்டம்|பரூச் மாவட்டத்தை]] அடைகிறது. ஆற்றின் கரைகள் பழைய வண்டல் படிமங்களாலும் உறுதியான சேறாலும் பளிங்குகல் பாறைகள் மண்துகளின் சரளைகளாலும் உயர்ந்து காணப்படுகிறது. மக்ரையில் இதன் அகலம் 1.5 கிமீ ஆகும் பரூச் அருகே இதன் அகலம் 3 கிமீ ஆகும். கம்பாத் வளைகுடா கழிமுகத்தில் இதன் அகலம் 21 கிமீ ஆகும். பழைய நருமதையின் சுவடு பரூச் நகருக்கு தெற்கே 1-2 கிமீ தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குசராத்திலேயே முழுவதும் ஓடும் ஒர்சாங், கர்சான் ஆகியவை நருமதையின் முக்கிய துணையாறுகள் ஆகும். ஒர்சாங் நருமதையுடன் சேன்டாட் என்னுமிடத்தில் கூடுகிறது. அதற்கு எதிர்கரையில் உள்ள கர்னலியில் ஆறுகள் கூடுவதால் அப்பகுதியில் கூடுதுறை அமைந்துள்ளது. கர்சான் கூடுதுறைக்கு சில கிமீ தள்ளி ருத் என்னுமிடத்தில் இணைகிறது.
 
==நர்மதா பரிக்ரமா==
8,473

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819867" இருந்து மீள்விக்கப்பட்டது