வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{வேளாண்மை}}
'''உழவு''' அல்லது '''வேளாண்மை''' அல்லது '''விவசாயம்''' அல்லது '''கமம்''' என்பது [[உணவு]]க்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் [[பயிர்]]களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு அவற்றை நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
வீட்டு [[விலங்கு|விலங்குகளினதும்]] தாவரங்களினதும் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு [[நாகரிகம்|நாகரிகங்களுக்கு]] வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது [[மக்கள் தொகை அடர்த்தி|அடர்த்தியான மக்கள் தொகை]] மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசனங்கள்]] மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு வேளாண் தொழில் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய [[நிலம்|நிலத்தில்]] பயிர்களை சாகுபடி செய்தல், [[கால்நடை]]களை வளர்த்தல், மேய்ச்சல் நிலத்திலோ தரிசுநிலத்திலோ கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை வேளாண்மையின் அடித்தளமாக விளங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது