இட்சுகுசிமா கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,494 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
=== கியோமோரி ===
16 ஆம் நூற்றாண்டில் போர்த் தலைவர்கள் தமது அதிகார பலத்தையும் சிறப்பையும் எடுத்துக் காட்டுவதற்காகக் கோயில்களைக் கட்டுவதும், பிற கட்டிடத் திட்டங்களை முன்னெடுப்பதும் வழக்கம். தைராக்கள், சுங் வம்சத்துடன் கொண்டிருந்த கடல்வழி வணிகத் தொடர்புகளுக்காகவும், உள்நாட்டுக் கடற் பகுதிகளின் வெளிநாட்டு வணிகத்தில் தனியுடமையை நிலைநாட்ட முயன்றது தொடர்பிலும் பெரிதும் அறியப்படுகின்றனர். தீவின்மீது தைரா மேலாட்சியை நிறுவியபோது கியோமோரியின் அதிகார பலம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது. கடற்பயணப் பாதுகாப்புக்கான கடவுளை வழிபாட்டுக்காகவும், கடல்சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தளமாகப் பயன்படுவதற்காகவும் இட்சுகுசிமா கோயிலின் முதன்மை மண்டபத்தைக் கட்டும்படி கியோமோரி உத்தரவிட்டார். இட்சுகுசிமா கோயில் விரைவிலேயே தைராக்களின் குடும்பக் கோயில் ஆகியது. பெருமளவு பணத்தை இட்சுகுசிமாவில் செலவு செய்த கியோமோரி அவ்விடத்தை நண்பர்களுக்கும், சில சமயங்களில் அரச ஆளுமைகளுக்கும் காட்டி மகிழ்ந்தார்.
 
இட்சுகுசிமாத் தீவில் கோயில் ஒன்றைக் கட்டி அங்கே உறையும் கடவுளை வழிபட்டால் சப்பானின் மீது மேலாட்சி கிடைக்கும் எனக் கனவொன்றில் வந்த வயதான குருவானவர் உருதிமொழி கொடுத்ததனால், கியோமோரி கோயிலை மீளக் கட்டியதாகவும் சொல்லப்படுகின்றது. தைராவினால் நிதி வழங்கப்பட்டு இடம்பெற்ற திருத்த வேலைகளினால், இட்சுகுசிமா ஒரு முக்கிய மத நிலையமாக வளர்ச்சியுற்றது.
 
[[பகுப்பு: சப்பானிய வழிபாட்டிடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819900" இருந்து மீள்விக்கப்பட்டது