பண்பாட்டுப் பேரரசுவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''பண்பாட்டுப் பேரரசுவாதம்''' என்பது, ஒரு [[நாட்டினம்|நாட்டினத்...
 
No edit summary
வரிசை 1:
'''பண்பாட்டுப் பேரரசுவாதம்''' என்பது, ஒரு [[நாட்டினம்|நாட்டினத்தின்]] பண்பாட்டை இன்னொரு நாட்டினத்திடம் செல்வாக்குச் செலுத்தச் செய்யும் அல்லது செயற்கையாகத் திணிக்கும் ஒரு நடைமுறை ஆகும். பொதுவாக முதல் நாட்டினம், இரண்டாவதைவிடப் பெரிதாகவோ, [[பொருளியல்]] அல்லது [[படை]] பலத்தில் மேம்பட்டதாகவோ இருக்கும். இரண்டாவது நாட்டினம் சிறிதாகவோ அல்லது வலுக்குறைந்ததாகவோ இருக்கும். பண்பாட்டுப் பேரரசுவாதம், தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் முறையானதொரு கொள்கையாகவோ, ஒரு பொதுவான மனப்போக்காகவோ இருக்கலாம். இச் சொல் பொதுவாக இந்த நடைமுறையை இழிவுபடுத்தும் நோக்கில், பெரும்பாலும் வெளிநாட்டுச் செல்வாக்கை எதிர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பிலேயே பயன்படுத்தப்படுகிறது.
 
==தொடக்க வரலாறு==
ஒரு காலத்தில் கிரேக்கப் பண்பாட்டினர், தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் உடற்பயிற்சிக் கூடங்களையும், [[அரங்கு]]களையும், பொதுக் குளியல் மண்டபங்களையும் கட்டி அந் நாட்டினரைத் தமது பண்பாட்டினுள் அமிழ்ந்துபோகச் செய்தனர். பொதுக் [[கிரேக்க மொழி]]யின் பரவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அமெரிக்காக் கண்டங்களில் ஐரோப்பியக் குடியேற்றம் வளர்ச்சியுற்றபோது, ஐரோப்பிய நாடுகளான [[ஸ்பெயின்]], [[போர்த்துக்கல்]], [[பிரான்ஸ்]], [[நெதர்லாந்து]] போன்ற நாடுகள், தமது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக அங்கே நாடு பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். இவ்வாறு கைப்பற்றிய குடியேற்ற நாடுகளில் தமது மொழிகளையும், பண்பாடுகளையும் திணித்தனர். இது போலவே 19 ஆம் நூற்றாண்டில் ரஷ்யப் பேரரசின் கீழ் இருந்த பகுதிகளில் ரஷ்யப் பண்பாடு திணிக்கப்பட்டது. பண்பாட்டுப் பேரரசுவாதத்தின் விளைவால் எழுந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 1549 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[வழிபாட்டு நூல் கலகம்]] ஆகும். இதில், பொது வழிபாட்டுக்கான [[ஆங்கில மொழி]] நூல் ஒன்றை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஆங்கில அரசு பிற மொழிகளை அடக்க முயன்றது. இலத்தீனுக்குப் பதிலாக ஆங்கிலத்தைக் கொண்டு வருதல், கத்தோலிக்க மதத்தை க்களுடைய மொழியாக ஆக்கும் முயற்சியில் ஆங்கிலம் தேவாலய மொழியாகத் திணிக்கப்பட்டது.
 
[[பகுப்பு:சமூகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டுப்_பேரரசுவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது