நீலத் திமிங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
}}
 
'''நீலத் திமிங்கலம்''' ''(Blue whale)'' என்பது [[கடற்பாலூட்டி]] வரிசையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். அளவு மற்றும் எடையின் படி இதுவே உலகிலுள்ள மிகப்பெரிய விலங்கு ஆகும். இது சராசரியாக 80 முதல் 100 [[அடி]] வரை [[நீளம்]] கொண்டது. இது மிகவும் பெரிய உயிரினம் என்பதால் இதன் [[நிறை]]யை சரியாக கணிப்பிட இயலாது. எனினும் சாதாரணமாக 100 அடி நீளமான நீலத்திமிங்கிலத்தின் [[எடை]] சராசரியாக 170150 [[டன்]] அளவில் இருக்கும் என கணித்திருக்கிறார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீலத்திமிங்கலத்தின் அதிகபட்ச எடை 173 டன். இது மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருப்பதுடன் இதன் [[தலை]]ப்பகுதி மட்டமானதாக காணப்படும். நீலத் திமிங்கிலம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3,600 கிலோ உணவை உட்கொள்கிறது. 1700களில் கடலில் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் நீலத்திமிங்கிலங்கள் இருந்தன ஆனால் தற்போது வெறும் ஐந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் நீலத்திமிங்கிலங்களே உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite journal | title=திமிங்கிலம் அழிந்தால் என்னவாகும் | author=த.வி.வெங்கடேஸ்வரன் | journal=தி இந்து | year=2016 | month=மார்ச் | volume=வெற்றிக்கொடி இணைப்பு| doi=29, மார்ச் 2016}}</ref>
 
உலகின் எல்லாக் கடல்களிலும் இவை வசிக்கும். தனியாகவோ, சின்னக் கூட்டமாகவோ வலம் வரும். சராசரியாக 80 முதல் 90 வருடங்கள் வாழும். 25 முதல் 32 மீட்டர் நீளம் இருக்கும். இவற்றின் தோல், நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/நீலத்_திமிங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது