குத்து, கிடைநிலை அமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +
வரிசை 1:
{{inuse}}
[[File:Aftercooler-Belt Guard.jpg|240px|கிடைநிலை அமுக்கி|thumb|right]]
[[File:Aftercooler-Stand-Alone.jpg|240px|குத்துநிலை அமுக்கி|thumb|right]]
வரி 19 ⟶ 18:
 
== குத்து, கிடைநிலை அமுக்கிகளின் செயற்பாடு ==
ஒற்றை வணரி அணிகள், கிடை அல்லது குத்துநிலையில் இரட்டைச் செயல்பாட்டு முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உருளைகளுடன் ஒரே சட்டத்தில் ஒரே [[நேர்கோடு|நேர்கோட்டில்]] அமைக்கப்படுகின்றன.<ref>{{Cite news|url=http://www.popularmechanics.com/home/how-to/a151/how-air-compressors-work/|title=How Do Air Compressors Work?|date=2015-03-18|newspaper=Popular Mechanics|access-date=2017-01-12}}</ref> இதில் ஒரே ஒரு வணரித்தண்டும், இணைப்புத் தண்டும் குறுக்குத் தலையும் (cross head) அமைந்திருக்கும். v அல்லது Y வகை கோண அணிகள் குத்துக்கோட்டுடன் 45° கோணத்தில் அமைந்த இரண்டு உருளைகளைக் கொண்ட அமுக்கிகள் ஆகும். இதில் ஒரே ஒரு வணரித்தண்டு பயன்படுகிறது. பகுதி ஆர (semi radial) அமுக்கிகள் Y அல்லது V வகை அமுக்கியைப் போன்றனவே. ஆனால் இவற்றில் கிடைநிலையில் அமைந்த இரட்டைச் செயல்பாட்டு உருளைகள் ஒவ்வொரு புறமும் அமைந்திருக்கும். இருமை அமுக்கிகள் (duplex compressors) என்பன இரண்டு இணையான வட்டங்களில் உருளைகள் இணைக்கப்பட்டு ஒரு பொது வணரி அச்சுத்தண்டில் இயங்குகின்றன. நீராவிபால் ஓட்டப்படும் இருமைத் தன்செயல்பாட்டு அணிகளில் [[நீராவி]] உருளைகள் காற்று உருளைகளின் கோட்டில் அமைந்திருக்கும். நீராவியால் ஒட்டப்படும் இருமை நான்கு முனை அமுக்கிகளில் ஒன்று அல்லது இரண்டு அமுக்கும் உருளைகள் சட்டத்தின் ஒவ்வோர் ஓரத்திலும் இருக்கும். அதற்கு எதிர்ப்புறமாக நீராவி உருளைகள் அமைந்திருக்கும். நான்கு முனை மின்னோடியால் (motor) ஓட்டப்படும் அமுக்கி அணிகளில் அமுக்கிச் சட்டகங்களுக்கும் அச்சுத்தண்டுக்கும் நடுவில் மின்னோடி அமைந்திருக்கும். ஊடாட்ட அமுக்கிகள் ஒரு நிமிடத்துக்கு 100 ஆயிரம் பருமன் [[அடி]]கள் வெளியேற்றும். இதன் அழுத்தம் சதுர அங்குலத்துக்கு 35 ஆயிரம் [[பவுண்டு]]களாகும். இதைவிட உயர்ந்த அழுத்தமும் அதிக வெளியேற்றக் கொள்ளளவும் உடைய சிறப்பு அமுக்கிகளையும் செய்யலாம். உருளைகளையும் அகக் குளிர்கலன்களையும் குளிர்விக்கக் குளிர் பொருளாகத் தண்ணீர் பயன்படுகிறது. வேறு நீர்மங்களோ குளிர்பதனப் பொருள்களோ கூட இதற்காகப் பயன்படுத்தப்படலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குத்து,_கிடைநிலை_அமுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது