சோர்சிய எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சோர்சிய எழுத்துக்கள்''' ( Georgian scripts) என்பது சோர்சிய மொழியை எழுதுவதற்குப் பயன்படும் மூன்று எழுத்து முறைகளைக் குறிக்கும். இவை அசோம்தாவ்ரூலி (Asomtavruli), நூசுக்கூரி (Nuskhuri), இம்கெட்ரூலி என்பன. இவை தோற்றத்தில் வேறுபாடாகக் காணப்பட்டாலும், அவற்றின் எழுத்துக்கள் ஒரே பெயர் கொண்டவையாகவும், ஒரே ஒழுங்குமுறை வரிசையில் உள்ளனவாகவும், இடமிருந்து வலமாக எழுதப்படுவனவாகவும் உள்ளன. இம்கெட்ரூலி சோர்சிய இராச்சியத்தின் அரச எழுத்துமுறையாக இருந்ததுடன் பெரும்பாலும் அரச ஆணைகளை எழுதுவதற்கு இது பயன்பட்டது. இது இப்போது தற்கால சோர்சிய மொழிக்கான எழுத்து முறையாக உள்ளதுடன், அம்மொழியுடன் தொடர்புடைய கார்ட்வெலியன் மொழிகளை எழுதுவதற்கும் பயன்படுகின்றது. அசோம்தாவ்ரூலியையும் நூசுக்கூரியையும் சோர்சியப் பழமைவாதத் திருச்சபை மட்டுமே, அதன் சடங்கு சார்ந்த எழுத்துத் தேவைகளுக்கும், படிமவியல் தேவைகளுக்கும் பயன்படுத்தியது.
 
தோற்ற அடிப்படையில் சோர்சிய எழுத்துக்கள் தனித்துவமானவை. அவற்றின் சரியான தோற்றம் பற்றித் தெரியவில்லை. அமைப்பு அடிப்படையில் எழுத்துக்களின் ஒழுங்குமுறை பெருமளவுக்குக் கிரேக்க எழுத்து முறையை ஒத்துள்ளது. சோர்சிய மொழிக்குத் தனித்துவமான ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களை வரிசையின் கடைசியில் சேர்த்துள்ளனர். தொடக்கத்தில் இந்த எழுத்து முறையில் 38 எழுத்துக்கள் இருந்தன. தற்போதைய சோர்சிய மொழியில் 33 எழுத்துக்களே பயன்படுகின்றன. 5 எழுத்துக்கள் அம்மொழிக்கு இப்போது தேவையற்றவை ஆகிவிட்டன. இவ்வெழுத்து முறையில் பிற கார்ட்வெலிய மொழிகள் பயன்படுத்தும் எழுத்துக்களின் எண்ணிக்கைகள் வேறுபடுகின்றன. மிங்கிரேலிய மொழி 36 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றது. சோர்சிய மொழியில் தற்போது பயன்பாட்டில் உள்ள 33 எழுத்துக்களுக்கு மேலாக வழக்கொழிந்த ஒரு எழுத்தும், மிங்கிரேலிய மொழிக்குத் தனித்துவமான ஒலிகளுக்காக மேலும் இரு எழுத்துக்களும் இவற்றுள் அடங்குகின்றன. லாசு மொழி, சோர்சிய மொழியில் வழக்கிலுள்ள 33 எழுத்துக்களுடன் ஒரு வழக்கொழிந்த எழுத்தையும், கிரேக்க மொழியிடம் கடன்பெற்ற இன்னொரு எழுத்தையும் சேர்த்து 35 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றது. நான்காவது கார்ட்வெலிய மொழியான இசுவான் (Svan), பொதுவாக இதை எழுதுவது வழக்கமில்லை. ஆனால், தேவைப்படும்போது மிங்கிரேலிய மொழி பயன்படுத்தும் எழுத்துக்களுடன் ஒரு வழக்கொழிந்த சோர்சிய எழுத்தையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். சிலவேளைகளில் அம்மொழியின் பல உயிரொலிகளைக் குறிக்கத் துணைக் குறிகளும் (diacritics) பயன்படுகின்றன.
 
[[பகுப்பு:எழுத்து முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோர்சிய_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது