சோர்சிய எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
தோற்ற அடிப்படையில் சோர்சிய எழுத்துக்கள் தனித்துவமானவை. அவற்றின் சரியான தோற்றம் பற்றித் தெரியவில்லை. அமைப்பு அடிப்படையில் எழுத்துக்களின் ஒழுங்குமுறை பெருமளவுக்குக் கிரேக்க எழுத்து முறையை ஒத்துள்ளது. சோர்சிய மொழிக்குத் தனித்துவமான ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களை வரிசையின் கடைசியில் சேர்த்துள்ளனர்.{{sfn|Shanidze|2000|p=444}}<ref name=Lig1>{{Cite journal |url=https://www.academia.edu/1355678 |title=The Creation of the Caucasian Alphabets as Phenomenon of Cultural History |first= Werner |last= Seibt}}</ref> தொடக்கத்தில் இந்த எழுத்து முறையில் 38 எழுத்துக்கள் இருந்தன.{{sfn|Machavariani|2011| p= 329}} தற்போதைய சோர்சிய மொழியில் 33 எழுத்துக்களே பயன்படுகின்றன. 5 எழுத்துக்கள் அம்மொழிக்கு இப்போது தேவையற்றவை ஆகிவிட்டன. இவ்வெழுத்து முறையில் பிற கார்ட்வெலிய மொழிகள் பயன்படுத்தும் எழுத்துக்களின் எண்ணிக்கைகள் வேறுபடுகின்றன. மிங்கிரேலிய மொழி 36 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றது. சோர்சிய மொழியில் தற்போது பயன்பாட்டில் உள்ள 33 எழுத்துக்களுக்கு மேலாக வழக்கொழிந்த ஒரு எழுத்தும், மிங்கிரேலிய மொழிக்குத் தனித்துவமான ஒலிகளுக்காக மேலும் இரு எழுத்துக்களும் இவற்றுள் அடங்குகின்றன. லாசு மொழி, சோர்சிய மொழியில் வழக்கிலுள்ள 33 எழுத்துக்களுடன் ஒரு வழக்கொழிந்த எழுத்தையும், கிரேக்க மொழியிடம் கடன்பெற்ற இன்னொரு எழுத்தையும் சேர்த்து 35 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றது. நான்காவது கார்ட்வெலிய மொழியான இசுவான் (Svan), பொதுவாக இதை எழுதுவது வழக்கமில்லை. ஆனால், தேவைப்படும்போது மிங்கிரேலிய மொழி பயன்படுத்தும் எழுத்துக்களுடன் ஒரு வழக்கொழிந்த சோர்சிய எழுத்தையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். சிலவேளைகளில் அம்மொழியின் பல உயிரொலிகளைக் குறிக்கத் துணைக் குறிகளும் (diacritics) பயன்படுகின்றன.<ref name="addit"/>{{sfn|Hüning|Vogl|Moliner|2012|p=299}}
 
2015 இல் இவ்வெழுத்து முறைகளுக்கு சோர்சியாவில் தொடுபுலனாகப் பண்பாட்டு மரபுரிமைக்கான தேசியத் தகுதி வழங்கப்பட்டது.<ref name="agenda.ge">{{cite news|title=Georgian alphabet granted cultural heritage status|url=http://agenda.ge/news/31109/eng|accessdate=30 November 2016|work=Agenda.ge|date=10 March 2015}}</ref> 2016 ஆம் ஆண்டில் இவ்வெழுத்து முறைகள், யுனெசுக்கோவின் மனிதகுலத்தின் தொடுபுலனாகாப் பண்பாட்டு மரபுரிமைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன.<ref name="unesco.org">{{cite web|title=Living culture of three writing systems of the Georgian alphabet|url=http://www.unesco.org/culture/ich/en/RL/living-culture-of-three-writing-systems-of-the-georgian-alphabet-01205|website=Representative List of the Intangible Cultural Heritage of Humanity|publisher=UNESCO|accessdate=30 November 2016}}</ref>
 
== தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/சோர்சிய_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது