கோட்டையகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கோட்டையகம்''' (Castle) அல்லது '''கோட்டை மனை''' என்பது ஐரோப்பாவில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள் என்போரும் படைத் தலைவர்களும் மத்திய காலப் பகுதியில் கட்டிய அரண் செய்யப்பட்ட கட்டிட அமைப்பைக் குறிக்கும். கோட்டையகம் என்னும் சொல் இக்கட்டுரையில் ''Castle'' என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகப் பயன்படுகின்றது. அறிஞர்கள் இதன்இச்சொல்லின் நோக்கம்பொருள் குறித்துகுறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தாலும், பொதுவாக இது பிரபுக்களின் அரண் செய்யப்பட்ட தனிப்பட்ட வசிப்பிடம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. ''மாளிகை'', ''கோட்டை'', ''அரணுடன்கூடிய குடியிருப்பு'' என்பவற்றில் கட்டிட அமைப்பில் ஒத்த தன்மைகள் காணப்பட்டாலும், அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. மாளிகை பொதுவாக அரண் செய்யப்படுவதில்லை. கோட்டை எல்லா வேளைகளிலும் அரசர்களினதோ, பிரபுக்களினதோ வசிப்பிடங்களாக இருப்பதில்லை. அரணுடன் கூடிய குடியிருப்பு மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்படுவது. வெவ்வேறு காலகட்டங்களில் இச்சொல் பல்வேறுபட்ட அமைப்புக்களைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. மலைக் கோட்டைகள், பெரிய நாட்டுப்புற வீடுகள் என்பனவும் இச்சொல்லால் குறிக்கப்பட்டன. கோட்டையகங்கள் பயன்பாட்டுக்கு வந்து ஏறத்தாழ 900 ஆண்டு காலப் பகுதியில், அவை பல்வேறு வடிவங்களைக் கொண்டவையாகவும், வேறுபட்ட அம்சங்களோடு கூடியனவாகவும் கட்டப்பட்டன. பாதுகாப்புச் சுவர்கள், அம்புத் தாக்குதலுக்கான இடைவெளிகள் போன்றைவை பொதுவாகக் காணப்பட்டன.
 
கரோலிங்கியன் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் அதன் ஆட்சிப் பகுதிகளைப் பல பிரபுக்களும், இளவரசர்களும் தம்மிடையே பிரித்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐரோப்பியப் பாணிக் கோட்டையகங்கள் 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றின. தம்மைச் சூழ இருந்த பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிரபுக்கள் கோட்டையகங்களை அமைத்தனர். இக்கோட்டையகங்கள் தாக்குதலுக்கும், தற்காப்புக்குமான அமைப்புக்களாக இருந்தன. பிற பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான தளமாக இவை பயன்பட்ட அதேவேளை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு அமைப்பாகவும் இவை செயற்பட்டன.
 
[[பகுப்பு:கோட்டையகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோட்டையகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது