அட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + வாழிடம்
சி →‎வாழிடம்: + உடலமைப்பு
வரிசை 17:
== வாழிடம் ==
அட்டை குளம் குட்டை ஆறு முதலிய [[நன்னீர்]] நிலைகளிலும், [[கடல்|கடலிலும்]], ஈரத்தரை மீதும் வாழும் ஒருவகைப் புழு. அன்னெலிடா (Annelida) என்னும் வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அட்டையில் பல சாதிகளுண்டு. அவை பலவகையான வாழ்க்கை முறையுள்ளவை. சில அட்டைகள் [[மண்புழு]], [[பூச்சி]]களின் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்கின்றன. அசுத்தங்களை உண்டு தோட்டிகள்போல அவற்றைச் சில நீக்குகின்றன. பெரும்பாலான வகைகள் மற்றப் பிராணிகளின் உடம்பில் எப்போதும் அல்லது சிற்சில சமயங்களில் ஒட்டிக் கொண்டு அவற்றின் உடலிலுள்ள இரத்தத்தையோ சாற்றையோ உறிஞ்சி [[ஒட்டுண்ணி]]களாக வாழ்கின்றன. அட்டை நீரில் நன்றாக நீந்தும். அதன் உடலை மேலும் கீழுமாகச் செங்குத்தாக அலைபோல அசைத்து நீந்திச் செல்லும். நாம் கைவிரல்களால் ஓட்டை அல்லது சாண் அளப்பதுபோலத் தரையில் அட்டை ஊர்ந்து செல்லும் இயல்புடையன ஆகும்.
 
== உடலமைப்பு ==
அட்டையின் உடல் சற்றுத் தட்டையாக இருக்கும். தோலின் மேலே குறுக்கே உடல்நெடுக மடிப்பு மடிப்பாக இருக்கும். மருத்துவத்தில் உபயோகப்படும் சாதாரண அட்டையின் உடலில் இந்தத் தோல் மடிப்புக்கள் நூற்றுக்குமேல் இருக்கும். இதன் உடல் 33 வளையங்களால் ஆனது. 26 வளையங்களை எண்ணலாம். பொதுவாக ஒரு உடல் வளையத்துக்கு 5 தோல் மடிப்புக்கள் இருக்கின்றன. முன்பக்கத்தில் 5 ஜதைக் கண்கள் இருக்கின்றன. அட்டையின் முன்முனையிலும் பின் முனையிலும் உறிஞ்சிகள் (Suckers) என்னும் உறுப்புக்கள் உண்டு. இவை வட்டமான அல்லது நீளவட்டமான சற்றுக் குழிந்த கிண்ணம் போன்றவை. இவற்றைத் தட்டையாக அமுக்கி ஓரத்தை அழுத்திக் கொண்டே நடுவிலுள்ள பாகத்தைச் சற்று உயர்த்துவதால் இவற்றிற்குள்ளே அழுத்தம் குறைவான ஓர் இடம் உண்டாகிறது.
 
இதன்மேல் அழுத்தம் மிகுந்திருப்பதால் இந்த உறிஞ்சி இடப்பட்ட இடத்திற்குக் கெட்டியாக ஒட்டிக்கொள்கிறது. உறிஞ்சியை விடுவிக்க வேண்டுமானால் ஓரத்தைச் சற்றுத் தூக்கினால் போதும்; உள்ளும் புறமும் அழுத்தம் ஒன்றாகி உறிஞ்சியின் பிடிப்பு விட்டுவிடும். முன்னுறிஞ்சியின் நடுவில் வாய் இருக்கிறது. அதில் மூன்று வளைவான தகடு போன்ற தாடைகள் உண்டு. ஒவ்வொரு தாடையின் விளிம்பிலும் கூரான பற்கள் உண்டு. இவையெல்லாம் கைடின் (Chitin) என்னும் பொருளாலானவை. உறிஞ்சியால் அழுத்திப் பற்றிக் கொண்டு இந்தத் தாடைகளை முன்னும் பின்னும் அசைவித்து அட்டை தான் ஒட்டிக்கொண்டிருக்கும் பிராணியின் தோலிலே முக்கோண வடிவான ஒரு காயம் உண்டாக்குகிறது. அதன் வழியாக அட்டை இரத்தத்தை உறிஞ்சும். அட்டையின் உமிழ்நீர் அதோடு கலக்கும். அந்த உமிழ்நீரில் ஹிருடின் என்னும் ஒரு சத்து இருக்கிறது. அது [[இரத்தம்]] உறைந்து போகாமல் திரவமாகவே இருக்கச் செய்கிறது. அட்டையின் தீனிப்பையில் (Crop) ஜதைஜதையாகப் பல பைகள் இருக்கின்றன. சாதாரண அட்டையில் 11 ஜதைகள் இருக்கின்றன. இவற்றில் இரத்தம் சேகரித்து வைக்கப்படுகிறது. அட்டை ஒரு தடவை நன்றாக இரத்தம் குடித்துவிட்டால் 10, 12 மாதம்கூட உணவின்றி உயிர் வாழ்ந்திருக்கும்.
 
அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது. இந்த நன்னீர் அட்டைகளின் உமிழ்நீரில் இருந்து சுரக்கும் இருடின் என்னும் நொதியானது [[பாலூட்டி|பாலூட்டிகளின்]] இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது<ref name="த. நா அரசுப் பாடநூல் 9-ஆம் வகுப்பு">{{cite book | title=அறிவியல் பாடநூல் ஒன்பதாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு அரசு | year=2011}}</ref>. இதன் மூலம் அட்டைகள் பாலூட்டிகளின் குருதியை எளிதாக உறிஞ்சிக் குடிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது