அட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உடலமைப்பு: == இனப்பெருக்கம் ==
வரிசை 27:
== இனப்பெருக்கம் ==
அட்டை [[இருபாலுயிரி|இருபால்]] உயிரினம் ஆகும். ஒரே அட்டையில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டும் உண்டு. இரண்டு அட்டைகள் சேரும்போது ஒன்றின் விந்தணுக்கள் மற்றொன்றின் தோலின்மேல் இடப்படும். அவை உடம்பினுள்ளே தொளைத்துச் சென்று அண்டவணுக்களை நாடி அவற்றைக் கருவுறச் செய்கின்றன. உடம்பின் முற்பகுதியில் ஒரு பாகத்தின் மேல்தோல் பூண்போலக் கழன்றுவரும். அந்தப் பாகத்துக்குக் கிளைட்டெல்லாம் (Clitellum) என்று பெயர். இது கழன்று உடம்பின் முன்முனை வழியாக வெளிவரும். அப்படி வரும்போது அந்த அட்டையின் கருவுற்ற அண்டவணுக்கள் கிளைட்டெல்லத்துக்குள் சேரும். கிளைட்டெல்லம் வெளியே கழன்று வந்ததும் அதன் இரு முனைகளும் மூடிக்கொண்டு ஒரு கூடு (Cocoon) ஆகிவிடும். அட்டை இந்தக் கூட்டை நீர்மட்டத்துக்கு மேலேயுள்ள சேற்றிலே இடும். கூட்டுக்குள் கரு வளர்ந்து நாளடைவில் சிறு அட்டைகள் வெளிவரும்.
 
== மனித உறவு ==
அட்டைகளால் மிகுந்த ஆபத்து விளைவதுண்டு. நீரில் இறங்கும் கால்நடைகளின் மூக்கு தொண்டை முதலிய வீடங்களில் புகுந்து கொள்ளும். குளிக்கும்போதும், நீர்குடிக்கும்போதும் மனிதனுடம்பிலும் அவ்வாறு புகுந்துவிடும். [[மூச்சுக்குழாய் (முதுகுநாணி)|மூச்சுக் குழாய்]]களிலும், மூக்கின் உள்ளேயிருக்கும் சந்துகளிலும், கன்ன எலும்பின் புழைகளிலும் இருந்துகொண்டு பெருந்துன்பமும் இரத்தப் பெருக்கும் விளைவித்துவரும். முடிவில் சாவும் நேர்வதுண்டு. மழை மிகுதியாகப் பெய்யும் [[காடு]]களில் நிலத்தின்மேல் கணக்கற்ற எண்ணிக்கையில் சில அட்டைகள் உண்டு. அவை அங்குச் சஞ்சரிக்கும் விலங்குகளுக்கும் மனிதருக்கும் மிக்க இடர் செய்யும்.
 
==அட்டைப் பூச்சி மருத்துவம்==
"https://ta.wikipedia.org/wiki/அட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது