ஈப்பிடிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இனங்கள்: '''அரிவாள் குருவி''' அல்லது வால் குருவி
வரிசை 1:
[[File:Asian Paradise-flycatcher (Female).jpg|240px|அரிவாள் குருவி / வால் குருவி |thumb|right]]
 
'''ஈப்பிடிப்பான்''' பெரும்பாலும் ஊர்க்குருவி அல்லது புல்புல் என்னும் [[கொண்டைக்குருவி]] யளவிலுள்ள சிறு பறவைச் சாதிகள் இவற்றின் அலகு குட்டையாகவும் அகலமாகவும், அடி அழுந்தியும், நுனிமுனை கொக்கிப்போல வளைந்தும் இருக்கும். [[ஈ]], சுள்ளான், [[கொசு]], [[ஈசல்]], விட்டில் முதலிய சிறு பூச்சிகளே இவற்றிற்கு முக்கியமான இரை. மரத்தின் மேற்கிளைகளிலோ, தந்திக்கம்பி முதலியவற்றின் மேலோ, நிமிர்ந்து உட்கார்ந்திருந்து, பூச்சியைக் கண்டவுடன் துடுமெனப் பாய்வதுபோலப் பறந்துபோய்ப் பற்றும். பூச்சி தப்பித்துக் கொள்ள முயன்று இங்குமங்கும் பாய்ச்சல் காட்டிச் சுழலுமானால், அதற்கேற்றவாறு இப்பறவையும் தக்கவாறு திரும்பியும், சுழன்றும், கரணம் போட்டும், அவற்றைப் பிடிக்க முயலும் திறமை அதிசயமாக இருக்கும். இரையைப் பிடித்துக்கொண்டு திரும்பத் தானிருந்த விடத்திற்கு வந்து உட்காரும். இவற்றில் சில சாதிகளுண்டு. அவற்றில் சில அவை காணப்படும் பகுதியிலேயே வாழ்பவை. சில சில பருவங்களில் அவ்விடங்களுக்கு வலசை வருவன.
 
வரி 5 ⟶ 7:
 
== இனங்கள் ==
 
[[File:Asian Paradise-flycatcher (Female).jpg|240px|அரிவாள் குருவி / வால் குருவி |thumb|right]]
'''வெண்ணீல ஈப்பிடிப்பான்''' (யூமையியாஸ் தலஸ்ஸினா) : ஆண், பளபளப்பான நீலமும் பச்சையும் கலந்த நிறமுடையது. இதுவும் ஊர்க்குருவியளவே இருக்கும். பெண் ஆணைவிட மங்கலாகவும் நரையாகவும் காணும். இது கோடையில் இமயமலை நெடுக 4-10 ஆயிரம் அடிகளிலும், அஸ்ஸாம், பர்மாவைக் கடந்தும் இருக்கும். குளிர்காலத்தில் தெற்கு நோக்கி வலசைவந்து, தமிழ் நாட்டின் தென்கோடிவரையிலும் செல்லும். இதற்கு நெருங்கிய ஓர் இனம் நீலகிரி வெள்ளைவால் ஈப்பிடிப்பான் (யூமையியாஸ் ஆல்பிகா டேட்டா), தென்னிந்திய மலைகளில் மிகச்சாதாரணமாக வாழ்வது. இதன் நிறமும் நீலமே. வாலின் அடிப்பாகமும் அடிவயிறும் வெண்மையாக இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஈப்பிடிப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது