ஈப்பிடிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,566 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎வாழிடம்: + இனப்பெருக்கம்
சி (→‎இனங்கள்: + நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும். பெண்ணும் முதிர்ச்சியுறாத ஆண் இளம்பறவையும் முதுகு பக்கம் செம்பழுப்பாகவும், கீழ்ப்பக்கம் நரைவெண்மையாகவும் இருக்கும். இளைய ஆணுக்கு இரண்டு வாலிறகுகளும் செம்பழுப்பாகவே இருக்கும். பெண்ணுக்கு இந்த நீண்ட வாலிறகுகள் இருப்பதில்லை. இவை தனித்தோ இணையாகவோ மர மடர்ந்த இடங்களில் வாழும். இந்தியாவில் எங்கும் 5,000 உயரம் வரையில் இருக்கிறது பல இடங்களில் எப்போதுமே வசிக்கும்.)
சி (→‎வாழிடம்: + இனப்பெருக்கம்)
== வாழிடம் ==
இவை பெரும்பாலும் மரங்களில் இலை, புல், சிறு வளார், வேர், பாசம் முதலியவற்றைக் கொண்டு கிண்ணம்போன்ற கூடு கட்டும் சாதாரணமாக 3-5 [[முட்டை]]கள் இடும். மாசி முதல் ஆடி வரையில் இவை குஞ்சு பொரிக்குங்காலம். இவற்றின் ஒலி சாதாரணமாகக் கிண்கிணி போலச் [[செவி]]க்கு இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவிலுள்ள சில இனங்கள் இங்குக் குறிக்கப்படுகின்றன. கருநீல ஈப்பிடிப்பான் (மஸ்க்கிகாப்புலா டிக்கெல்லியீ) ஊர்க்குருவி அளவுள்ளது. ஆண் முதுகுபுறம் நீலி. நெற்றியும் புருவமும் தோளும் பளிச்சென்ற நீலம். மார்பு இரும்புத் துருபோன்ற மங்கலான செந்நிறம். வயிற்றுப்புறம் இறங்கி வரவர வெண்மை நிறம் மிகும். பெண் ஆணைவிட மங்கலாக வெளுத்துத் தோன்றும். இவை தனித்தனியாக இருக்கும். செறிவில்லாத முட்செடிக் குறுங்காடுகளிலும் [[இலையுதிர் காடுகள்|இலையுதிர் காடுகளிலும்]] வசிக்கும். மேடு பள்ளமான மலையடிவாரப் பள்ளத்தாக்குக்களில் குளிர்ச்சியான நிழலுள்ள சோலைகளிலும் மூங்கில் புதர்களிலும் இருக்கும். வீட்டுத்தோட்டங்கள் தோப்புக்களிலும் வரும்.
மிகவும் அழகான இந்தப் பறவை நிழலான தோப்புக்களிலும் தோட்டங்களிலும் இலையுதிர் காடுகளிலும் மூங்கிற் புதர்களிலும் வசிக்கும். இவை தாமாகவும் மற்றும் வேறு சாதிச் சிறு பறவைகளோடு கூடியும் பூச்சி வேட்டையாடும். பூச்சியைப் பிடிக்க ஆண் துவண்டு வளைந்து பறந்து போகும் போதும், மரத்திலிருந்து மரம் மேலுயர்ந்தும் கீழே தாழ்ந்தும் அலை போலப் பறக்கும் போதும் அதன் வால் இறகுகள் கொடிபோலப் பின்னால் ஆடிக்கொண்டு வருவது அழகாக இருக்கும். இதன் ஒலி சே-சேச்வே என்று கேட்கும்; காதுக்கு இனிமையாக இராது. இணைகூடும் காலங்களில் ஆணும் பெண்ணும் இனிமையான சில கலகள் ஒலி செய்யும். [[மாசி]] முதல் [[ஆனி]] வரையில் முட்டையிடும். விசிறிக்குருவி போலவே இதுவும் மெல்லிய புல்இழை முதலியவற்றைக் கொண்டு கூடுகட்டிச் சிலந்தி வலையைக் கொண்டு போர்த்தும். 3-5 வெண்மை கலந்த ரோஜா நிறமானதும் செம்பழுப்புநிறப் புள்ளி விழுந்ததுமான முட்டையிடும். ஆணும் பெண்ணும் கூடு கட்டுவது முதலிய தொழிலில் ஈடுபடும். எனினும் பெண்ணே நிரம்ப வேலை செய்யும். 15-16 நாள் அடைகாக்கும். குஞ்சு பொரித்து 12 நாளில் கூட்டைவிட்டுப் பறக்கக் கூடும்.
 
== இனங்கள் ==
23,377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2823142" இருந்து மீள்விக்கப்பட்டது