ஈலமைட்டு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,401 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
: '''ஈலமைட்டு ஆப்பெழுத்து''' கி.மு 2500 க்கும் 331 க்கும் இடைப்பட காலப்பகுதியில் புழங்கிய ஒரு வரிவடிவம். இது [[அக்காடிய ஆப்பெழுத்து|அக்காடிய ஆப்பெழுத்தின்]] இசைவாக்கம் ஆகும். இது 130 குறியீடுகளைக் கொண்டுள்ளது. இது பிற ஆப்பெழுத்துகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவானதாகும்.
 
==பிற மொழிக் குடும்பங்களுடனான தொடர்புகள்==
ஈலமைட்டு மொழி, சுமேரிய அசையெழுத்து முறையைக் கைக்கொண்ட போதும்; அயலிலுள்ள [[செமிட்டிய மொழிகள்|செமிட்டிய மொழி]]களுடனோ, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]களுடனோ, [[சுமேரிய மொழி]]யுடனோ நெருங்கிய தொடர்பு எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
 
===ஈலமைட்டு-திராவிடமும், ஆபிரிக்க-ஆசிய மொழிகளும்===
ஈலமைட்டு மொழியை வகைப்படுத்துவதில் இரண்டு முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றில் ஈலமைட்டையும் திராவிட மொழிகளையும் ஈலமைட்-திராவிட மொழிக் குடும்பம் என்று வகைப்படுத்துவதற்கான முன்மொழிவு. இது டேவிட் மக் அல்ப்பின் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது வாக்லாவ் பிலாசெக் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஈலமைட்டு மொழி [[ஆசிய-ஆபிரிக்க மொழிகள்|ஆசிய-ஆபிரிக்க மொழி]]களுடன் நெருங்கியது என்றும் அக் குடும்பத்துள் ஈலமைட்டு ஒரு முக்கிய துணைக்குடும்பமாக அமையக் கூடும் என்றும் அவர் காட்ட முயன்றார். எனினும் இவை ஒரு எதிர்பார்ப்பே அல்லாது உறுதியான முடிவுகள் அல்ல.
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/282410" இருந்து மீள்விக்கப்பட்டது