"சர்காசோக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,969 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சர்காசோக் கடல்''' (Sargasso Sea) எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''சர்காசோக் கடல்''' (Sargasso Sea) என்பது நான்கு நீரோட்டங்களால் எல்லைப்படுத்தப்பட்டுசூழப்பட்டு பெருங்கடற் சுழலோட்டமாக உருவான, வட அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பகுதி ஆகும். கடல் என்று அழைக்கப்படும் பிறவற்றைப் போலன்றி இதற்கு நில எல்லைகள் கிடையாது. தனித்துவமான மண்ணிறமான சர்காசம் கடற்களைகளும், பெரும்பாலும் அமைதியான நீல நிறமான நீரும் இக்கடலை அத்திலாந்திக் பெருங்கடலின் பிற பகுதிகளில் இருந்து வேறுபடுத்துகின்றன.
 
இக்கடலின் மேற்கில் வளைகுடா நீரோட்டம், வடக்கில் வட அத்திலாந்திக் நீரோட்டம், கிழக்கில் கனரி நீரோட்டம், தெற்கில் வட அத்திலாந்திக் நிலநடுக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. மேற்படி நீரோட்டங்களால் உருவான மணிக்கூட்டுத் திசைச் சுழற்சியுடன் கூடிய பெருங்கடல் நீரோட்டத் தொகுதி வட அத்திலாந்திக் சுழலோட்டம் என அழைக்கப்படுகின்றது. இது மேற்கில் 70° க்கும் 40° க்கும் இடையிலும், வடக்கில்
20° க்கும் 35° க்கும் இடையிலும் பரந்துள்ளதுடன், இது ஏறத்தாழ 1,100 கிமீ (700 மைல்) அகலமும், 3,200 கிமீ (2,000 மைல்) நீளமும் கொண்டுள்ளது.
 
[[பகுப்பு:கடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2824284" இருந்து மீள்விக்கப்பட்டது