"சர்காசோக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,375 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இக்கடலின் மேற்கில் வளைகுடா நீரோட்டம், வடக்கில் வட அத்திலாந்திக் நீரோட்டம், கிழக்கில் கனரி நீரோட்டம், தெற்கில் வட அத்திலாந்திக் நிலநடுக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. மேற்படி நீரோட்டங்களால் உருவான மணிக்கூட்டுத் திசைச் சுழற்சியுடன் கூடிய பெருங்கடல் நீரோட்டத் தொகுதி வட அத்திலாந்திக் சுழலோட்டம் என அழைக்கப்படுகின்றது. இது மேற்கில் 70° க்கும் 40° க்கும் இடையிலும், வடக்கில்
20° க்கும் 35° க்கும் இடையிலும் பரந்துள்ளதுடன், இது ஏறத்தாழ 1,100 கிமீ (700 மைல்) அகலமும், 3,200 கிமீ (2,000 மைல்) நீளமும் கொண்டுள்ளது. பேர்முடா இக்கடலின் மேற்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது.
 
மேற்குறித்த எல்லா நீரோட்டங்களும் தாம் கொண்டுவரும் கடற் தாவரங்களையும், குப்பைகளையும் இக்கடலுக்குள் விடுகின்றன. ஆனாலும், சர்காசோக் கடல் நீர் ஆழமான நீல நிறத்தை உடையதாகவும், விதிவிலக்காகத் தெளிவானதாகவும் காணப்படுகின்றது. இதனால் இதன் நீரடிப் பார்வைத் தன்மை 61 மீ (200 அடி) வரை உள்ளது. இக்கடல் மக்களின் கற்பனையையும் தன்பால் ஈர்த்துள்ளது. இதனால், பலவகையான இலக்கிய ஆக்கங்களிலும், கலைப் படைப்புக்களிலும், பரந்த பொதுமக்கள் பண்பாடிலும் இக்கடல் இடம் பிடித்துள்ளது.
 
[[பகுப்பு:கடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2824306" இருந்து மீள்விக்கப்பட்டது