புளோரிடா நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''புளோரிடா நீரிணை''' என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''புளோரிடா நீரிணை''' என்பது, வட அமெரிக்கத் தலை நிலத்துக்கு தெற்கு-தென்கிழக்குத் திசையில், ''புளோரிடா கீஸ்'' தீவுக் கூட்டத்துக்கும், கியூபாவுக்கும் இடையில், மெக்சிக்கோ வளைகுடாவையும், அத்திலாந்திக் பெருங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ''கீ வெஸ்ட்'' தீவுக்கும், கியூபாவின் கரைக்கும் இடையில் காணப்படும் இந்நீரிணையின் மிக ஒடுக்கமான பகுதி 150 கிமீ (93 மைல்) அகலம் கொண்டது. இதன் ஆழம் 1,800 மீ (அண்ணளவாக 6,000 அடி) மெக்சிக்கோ வளைகுடாவில் இருந்து செல்லும் வளைகுடா நீரோட்டத்தின் தொடக்கமான புளோரிடா நீரோட்டம் இந்நீரிணையின் வழியே செல்கின்றது.
 
== எண்ணெயும் எரிவாயுவும் ==
புளோரிடா கீசுக்குத் தெற்கே மாநிலக் கடற் பகுதியில், 1947 இலிருந்து 1962 வரை நான்கு எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டன. 1960, 1961 ஆகிய ஆண்டுகளில் புளோரிடா கீசுக்குத் தெற்கே கூட்டாட்சி அரசின் கடற் பகுதியில் ''கல்ஃப் ஒயில்'' நிறுவனத்தால் மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டன. இக்கிணறுகள் அனைத்தும் உலர் துளைகள். இது இவ்விரு நாடுகளுக்கும் இடையில் 1977 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக, ஐக்கிய அமெரிக்காவின் தனிப் பொருளாதார வலயத்திற்கும், கியூபாவுக்கும் இடையிலான எல்லை கியூபாவுக்கும் புளோரிடாவுக்கும் நடுப் பகுதியில் உள்ளது.
 
புளோரிடாவுக்கு எதிரே, கியூபாவின் வட கரைக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் அந்நாட்டின் மூன்று எண்ணெய் வயல்கள் இருக்கின்றன. வட கியூபா கிண்ணப் பகுதியில் {{convert|5500000000|oilbbl}} கண்டுபிடிக்கப்படாத திரவ எண்ணெயும், 9.8 டிரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வகம் மதிப்பிட்டுள்ளது. இவை அனைத்தும் அக்கிண்ணப் பகுதியின் கரைக்கு அப்பால் இருக்கும் பகுதியிலேயே உள்ளன.
 
[[பகுப்பு: நீரிணைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/புளோரிடா_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது