"கோயம்புத்தூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
→‎வேளாண்மை: + விரிவு
சி (→‎வேளாண்மை: + விரிவு)
 
== வேளாண்மை ==
கோவை மாவட்டம் தலைசிறந்த [[தொழில்]] மாவட்டமாக விளங்கிய போதிலும், வேளாண்மையிலும் [[தஞ்சை]], [[திருச்சி]] மாவட்டங்களைப் போல, [[வேளாண்மை|வேளாண்மையிலும்]] சிறந்து விளங்குகிறது. மொத்த நிலபரப்பில் 65 சதவிகிதம் விவசாயம் சாகுபடி செய்யப்படுகின்றன. இம்மாவட்ட மக்கள் தொகையில், 30 சதவீத மக்கள் தங்கள் வாழ்வு ஆதாரத்திற்காக வேளாண்ம்பமையையும், அது சார்ந்த தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு
வருகின்றனர். இம்மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு ஏறத்தாழ 177313 [[எக்டேர்|ஹெக்டர்]] ஆகும். இதில் நிகர பகுதி விதைப்பு மட்டும் ஏறத்தாழ 173599 எக்டேர் ஆகும். மேலும், பல போகமாக பயிர்கள் ஏறத்தாழ 3714 எக்டேரில் விளைகின்றன. மற்ற மாவட்ட வேளாண் குடிமக்களை விட, இந்த மாவட்ட விவசாயிகள், புதிய தொழில் நுட்பங்களை விரைந்து ஏற்றுக் கொண்டு, அதன் நெளிவுசுளிவுக் கற்று, அவற்றில் முன்னோடியாக விளங்குகின்றனர். எனவே, இம்மாவட்டம் வேளான் உற்பத்தியில், பல ஆண்டுகளாக முன்னோடி மாவட்டங்களுள் சிறந்து விளங்குகிறது.
 
வேளாண் உற்பத்தியை உயர்த்தவேண்டி, பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும், அது தொடர்பான தொழில்நுட்பங்களை, வேளாண்மையினரிடம் கொண்டு சேர்ப்பதிலும், அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான முயற்சியை, இம்மாவட்ட விவசாயத்துறை திறமையாக கைக் கொள்கிறது. அதனால், விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம், அவர்களுடைய பணவரவு நிலைமையை மேம்பாடு அடைந்து காணப்படுகிறது. குறிப்பிடத் தக்க முறையில், [[பயிர் சுழற்சி]] முறையும், பயிர் பரவலாக்கல் முறையும், புதியத் தொழில் நுட்பங்களுடன், அதிமாக, தீவிரமான ஒருங்கிணைந்த வேளாண்மை (NMSA), நீடித்த வறட்சி நில வேளாண்மை, நுன்நீர்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பயனற்ற நில மேலாண்மை திட்டம், கூட்டு பண்ணை முறைகள், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளர்ச்சியுடைய செயல்பாடுகள், பசுமையான இயற்கை உரங்கள், உயிரி மிகுந்த உரங்கள் பின்பற்றப் படுகின்றன. இதன் மூலம் மண் வளம் வளர்ச்சி, ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை(IPM), அதனால் நீடித்த [[கரும்பு]] விவசாய வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை முறைகள், ஒருங்கினைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளல் முறைமை (INM) போன்றவைகளின் தொழில் நுட்பங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக அதிக முன்னுரிமை கொடுத்து, செயற் படுத்தப்படுகின்றன.<ref>https://coimbatore.nic.in/agriculture/</ref>
நெல், சோளம், கம்பு, ராகி, தினை, சாமை வரகு, முதலியவை சாகுபடி செய்யப்படுகின்றன.பயிறு வகைகளில் துவரை உளுந்து, கொள்ளு, மொச்சை, கடலை வகைகளும் சாகுபடி ஆகின்றன. பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு, தேங்காய் வாழை, மஞ்சள் போன்றவைகளும் பயிராகின்றன.பயிர் செய்யுப்படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள்.
 
கோயம்புத்தூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு, பாசன வசதியால் நெல் மிகுதியாக விளங்கிறது.
=== பயிர்கள் ===
[[நெல்]], [[சோளம்]], [[கம்பு]], [[கேழ்வரகு|ராகி]], [[தினை]], [[சாமை]] [[வரகு]] முதலிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிறு வகைகளில் [[துவரை]] [[உளுந்து]], [[கொள்ளு]], [[மொச்சை]], [[கடலை]] போன்ற பயிர் வகைகளும் சாகுபடி ஆகின்றன. பணப்பயிர்களான [[பருத்தி]], [[நிலக்கடலை]], [[புகையிலை]], [[கரும்பு]], [[தென்னை|தேங்காய்]], [[வாழை]], [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]] போன்றவைகளும் பயிராகின்றன. பயிர் செய்யுப்படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள். [[கோயம்புத்தூர்]], [[பொள்ளாச்சி]], [[உடுமலைப்பேட்டை]] வட்டங்களில் [[அமராவதி]], [[பவானி]], [[ஆழியாறு]] ஆகியவற்றின் பாசன வசதியால் [[நெல்]] மிகுதியாக விளங்கிறது. பல்லடம் வட்டாரத்தில் பழவகைகள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் தேங்காய் உற்பத்தி, மற்ற மாவட்டங்களை விட அதிகமாகும். [[திருப்பூர்]], [[அவிநாசி]] ஊர்களில் விளையும் [[எலுமிச்சை]] தரம் அதிகமுள்ளவையாகக் கருதப்படுகின்றன. அதேபோல, பொள்ளாச்சி வட்டாரத்தின் [[வெற்றிலை]], இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும். [[ஆனை மலை]]யில் விளைவிக்கப்படும், [[ஏலக்காய்]], சின்கோ, [[இரப்பர்]] மரங்களின் விளைச்சலாலும், இம்மாவட்ட வேளாண் குடிமக்கள் நல்ல பொருளாதார நிலைகளை அடைந்துள்ளனர்.
 
=== ஆறுகள் ===
[[ஆழியாறு]], [[சிறுவாணி ஆறு]], [[பவானி ஆறு|பவானி]], [[நொய்யல் ஆறு|நொய்யல்]] மற்றும், [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆறுகள் இம்மாவட்டத்தில்இந்த பாய்கின்றனமாவட்டத்தில் ஓடுகின்றன. உலகின் இரண்டாவது சுவையான குடீநீர் எனக் கருதப்படும், [[சிறுவாணி]] ஆற்று நீர் இந்த மாவட்டதில் ஓடுகிறது. கொடிவேரி நீர்வீழ்ச்சி, கோவையின் சுற்றுலா இடங்களில் புகழ் பெற்ற ஒன்றாகும்.<ref>https://www.trawell.in/tamilnadu/coimbatore/kodiveri-dam-waterfalls</ref>
 
=== அணைகள் ===
பாதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, நீலி அணைக்கட்டு, வெள்ளூர், சிங்காநல்லுர், குறிச்சி, போன்ற அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றால் கோவை, பல்லடம் பகுதி நிலங்களில் 15,000 [[ஏக்கர்]] பாசன வசதி பெறுகின்றன. அமராவதி ஆற்றுக்கு, குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளால், 9000 ஏக்கர் நிலங்களும், [[உடுமலை]] வட்டார பயிர் நிலங்களும் நீர் பாசன வசதியைப் பெறுகின்றன. அமராவதி நீர்த்தேக்கத்தின் வழியாக, 40,000 ஏக்கர் நிலங்கள் நீர் பாசன வசதியை அடைகின்றன.
 
=== நீர்மின் திட்டம் ===
உலகிலேயே சுவையான குடீநீர் இரண்டாம் இடத்தில் சிறுவாணி ஆறு இருக்கிறது.
பரம்பிக்குளம், ஆழியாறு நீர்மின் திட்டத்தின் படி, நான்கு இடங்களில், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சோலையாறு, [[ஆழியாறு]], சர்க்கார்பதி மின்நிலையங்கள் வழியாக, 200 [[வாட்டு (அலகு)|மெகா.வாட்]] நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுவதால், இம்மாவட்ட்த்தில் வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்கும், சிறு தொழில் பட்டரைகளுக்கும் தங்கு தடையின்றி மற்ற தமிழக மாவட்டங்களை இட மின்சாரம் கிடைப்பது, இம்மாவட்ட சிறப்புகளுள் ஒன்றாகும்.
 
== மாவட்ட நிர்வாகம் ==
22,320

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2825983" இருந்து மீள்விக்கப்பட்டது