கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தொழில்கள்: பிளேடு உற்பத்தி
சி →‎தொழில்கள்: முகசவர
வரிசை 44:
இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின. 1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை ஆகும். அதற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் வளர்ந்து ஓங்கின. 1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கப் பட்டதால், பல புதிய ஆலைகள் தோன்றின. கோவை மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய அறுபது பருத்தி ஆலைகள் உள்ளன. இது தவிர சிங்காநல்லுர், [[பீளமேடு]], கணபதி, உப்பிலிபாளையம் ஆகிய இடங்களிலும், பல ஆலைகள் செயற்படுகின்றன. அதனால், இம்மாவட்டத்தில், நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருவாய் ஈட்டுகின்றன. இதனால் நிலையான, உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் அடித்தளமாகின்றன. கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும், தென்னிந்தியாவின் (இங்கிலாந்தினைப் போல)மான்செசுடர் என அழைக்கப்படவும் காரணமாக விளங்குகின்றன. இங்கு 25000 இற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும் நூற்பாலைகளும் உள்ளன. கோயம்புத்தூர் சிறந்த நீர் ஏற்றுக் குழாய் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகள் என்பவற்றின்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930 இல் பைகாரா நீர்மின் திட்டம் செயற்படத் தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.
 
இந்தியாவில் முகச்சவர பிளேடுகள் தயாரிப்பதில் இம்மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2400 இலட்சம் பிளேடுகளை, இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது.இதனக் கண்டே, பிற இந்திய மாநிலங்களிலும் பிளேடு வகைகள் தயாரிக்கப்பட்டன என்பது வரலாற்று நிகழ்வாகும்.
 
கோயம்புத்தூர் மாவட்டம் அண்டை மாநிலமான கேரளத்திற்கும் புகழ் மிகுந்த உதக மண்டலத்திற்கும் நுழை வாயிலாக அமைந்துள்ளது. [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திருந்து]] இயங்கும் புகழ் பெற்ற மலைத் தண்டவாளம் இங்கிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு வழக்கமான பேருந்துப் போக்குவரத்துக்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது