புளோரிடா நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
2004 ஆம் ஆண்டில் எசுப்பானிய எண்ணெய் நிறுவனமான ரெப்சோல், கியூபாவுக்கும், புளோரிடா கீசுக்கும் இடையில் உள்ள ஆழமான கியூபாக் கடற் பகுதியில் எண்ணெய்க் கிணறொன்றைத் தோண்டி எண்ணெய்ப் படிவுகளைக் கண்டுபிடித்தனர். ஆனால் இது வணிகத்துக்கு உரியதல்ல என தீர்ப்பளிக்கப்பட்டதால் அக்கிணறு மூடப்பட்டது. 2008 ஒக்டோபரில், கியூபாவின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழமான கடற் பகுதியில் எண்ணெய், வாயு என்பவற்றைக் கண்டறிவதற்காக, பிரேசிலின் அரசாங்க எண்ணெய் நிறுவனமான பெட்ரோபாசுடன் கியூபா ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது. யூலை 2009 ஆம் ஆண்டில், எண்ணெய் கண்டறிவதற்கான அனுமதியை உருசிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் வகையில் உருசிய அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றில் கியூபா கையெழுத்திட்டது. 2011 மே மாதத்தில், எண்ணெய்க்கான வாய்ப்புக்கள் குறைவாக இருந்ததால், பெட்ரோபாஸ் 2008 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டது.
 
===பகமாசு===
2009 ஆம் ஆண்டில் போக்லாந்துத் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட பகமாசு பெட்ரோலியம் நிறுவனமும் நோர்வேயைச் சேர்ந்த நிறுவனமான "இசுட்டட் ஒயில்" என்னும் நிறுவனமும், பகாமா நாட்டின் கடற் பகுதியில் எண்ணெய் கண்டறியும் முயற்சியில் கூட்டு முயற்சி ஒன்றை அறிவித்தனர். எனினும் அப்பகுதியின் பல்வேறு நாடுகளுடன் தனிப் பொருளாதார வலயத்தின் எல்லைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால் அந்த முயற்சி தள்ளி வைக்கப் பட்டதாக பகமாசு அரசு அறிவித்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/புளோரிடா_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது