பாரசீகப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''பாரசீகப் பேரரசு''' என்பது, பாரசீகரின் தொடக்கத் தாயகமான ஈரான...
 
No edit summary
வரிசை 1:
'''பாரசீகப் பேரரசு''' என்பது, பாரசீகரின் தொடக்கத் தாயகமான ஈரானியச் சமவெளிப் பகுதிகளுடன் சேர்த்து, [[மேற்காசியா]], [[நடு ஆசியா]] மற்றும் [[காக்கேசியா|காக்கேசியப்]] பகுதிகளை ஆண்ட, தொடர்ச்சியான பல ஈரானியப் பேரரசுகளைக் குறிக்கும். பாரசீகப் பேரரசுகளில் மிகவும் பெரிதாகப் பரந்திருந்தது, [[டேரியஸ்]], [[செர்க்செஸ்]] ஆகிய பேரரசர்களின் கீழிருந்த [[அக்கீமெனிட் பேரரசு]] (கி.மு 550–330) ஆகும். இப்பேரரசு பழங்காலக் கிரேக்க அரசுகளின் எதிரியாக விளங்கியது. இது ஈரானின் [[பார்ஸ் மாகாணம்|பார்ஸ் மாகாணத்தில்]] தொடங்கி விரிவடைந்த ஒரு பேரரசு ஆகும்.
 
இப் பேரரசு [[பேரரசன் சிரியஸ்|பேரரசன் சிரியசினால்]] நிறுவப்பட்டது. இவன் மெடெஸ் பேரரசைக் கைப்பற்றியதுடன், [[பபிலோனியா|பபிலோனியர்]], [[அசிரியா|அசிரியர்]], [[போனீசியர்]], [[லிடியர்]], [[கம்பிசெஸ்]] போன்றோரின் பகுதிகளையும் கையகப்படுத்தினான். சிரியசின் மகனும் தந்தை வழியைப் பின்பற்றி எகிப்தைக் கைப்பற்றினான். பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது. எனினும், ஈரானிய மரபினரான [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியர்]], [[செசெனிட் பேரரசு|செசெனிட்டு]]கள் காலத்திலும், ஈரானிய முஸ்லிம்களான [[சாபாவிட் மரபு|சாபாவிட்டுகள்]] காலத்திலும் மீண்டும் எழுச்சியுற்றது.
 
அகன்ற ஈரானில் மார்ச் 1935 க்கு முன்னிருந்த அரசுகள் அனைத்தையுமே கூட்டாக பாரசீகப் பேரரசு என மேனாட்டு வரலாற்றாளர் குறிப்பிட்டனர். பெரும்பாலான பாரசீகப் பேரசுகள் தத்தம் காலத்தில் [[பிரதேச வல்லரசு]]களாகவோ அல்லது [[அனைத்துலக வல்லரசு]]களாகவோ இருந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பாரசீகப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது