"குருதிவளிக்காவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

743 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
சி (*விரிவாக்கம்*)
'''ஹீமோகுளோபின்''', அல்லது '''ஈமோகுளோபின்''' அல்லது '''குருதிவளிக்காவி''' (Hemoglobin) என்பது [[மனிதர்|மனிதனதும்]] இதர [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளினதும்]] சில [[முதுகெலும்பிலி]]களினதும் [[குருதி|குருதியில்]] உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது [[செங்குருதியணு]]க்களில் உள்ள [[இரும்பு]] [[தனிமம்|தனிமத்தைக்]] கொண்ட [[ஆக்சிசன்]] கடத்தும் [[உலோகம்|உலோகப்]] [[புரதம்|புரதத்தைக்]] குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர். <br />
இது [[உடல்|உடலில்]] குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது [[குருதிப் புரதம்|குருதிப் புரதங்களில்]] மிக முக்கியமான புரதமாகும்.
 
பெரும்பான்மையான முதுகெலும்பிகளில் குருதிவளிக்காவி நான்கு குளோபியுளின் புரத மூலக்கூறுகள் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளோபியுளினும் இரும்புத் தனிமத்தைக் கொண்ட ஈம் (ஹீம்) எனப்படும் அமைப்புடன் இணைந்துள்ளது. ஈமோகுளோபின் எனப்படும் பெயருக்கு இதுவே காரணம் ஆகும்.
 
குருதிவளிக்காவி சுவாசப்பையில் இருந்து உயிர்வளியை உடலின் ஏனைய பாகங்களுக்குக் காவிச்செல்கின்றது. மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களில் [[செவுள்]] எனப்படும் சுவாச உறுப்பு நீரில் கரைந்துள்ள உயிர்வளியை உள்ளெடுத்த பிற்பாடு ஏனைய பாகங்களுக்கு காவிச்செல்வதற்கு குருதிவளிக்காவி உதவுகின்றது.
 
 
== புற இணைப்புகள் ==
3,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2827647" இருந்து மீள்விக்கப்பட்டது