காக்கேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[Image:Caucasus region 1994.jpg|thumb|320px|1994 ஆம் ஆண்டைச் சேர்ந்த காகேசியாவின் நிலப்பட...
 
No edit summary
வரிசை 8:
 
இப்பகுதி மிகுந்த [[சூழலியல்]] முக்கியத்துவம் கொண்டது. இங்கே 6,400 வகையான உயர்நிலைத் தாவரங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் 1,600 வரையானவை இப்பகுதிக்கே உரியனவாகும். இப்பகுதியின் சொந்த விலங்குகளுள், [[சிறுத்தை]]கள், [[பழுப்புக் கரடி]]கள், [[ஓநாய்]]கள், [[ஐரோப்பிய பைசன்]]கள், [[தங்கக் கழுகு]]கள் என்பன அடங்குகின்றன. [[முள்ளந்தண்டிலி]]களுள் 1,000 [[சிலந்தி]] வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
 
==வரலாறு==
[[Image:Caucasiamapussr.gif|thumb|right|350px|சோவியத் ஒன்றியத்தின் கீழிருந்த போது காக்கேசியாவின் நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம், 1952-1991.]]
ஆர்மேனியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளாக அமைந்துள்ள காக்கேசியா, பல நூற்றாண்டுகளாக அரசியல், சமய, படை மற்றும் பண்பாட்டுப் போட்டிகளுக்கானதும் [[விரிவாக்கலியம்|விரிவாக்கலியத்தினதும்]] களமாக விளங்கியது. வரலாற்றின் பெரும்பகுதியில் இது [[பாரசீகப் பேரரசு]]டன் இணைந்து இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் [[ரஷ்யப் பேரரசு]] இப்பகுதியை [[கஜார்]]களிடம் இருந்து கைப்பற்றியது. ஆர்மேனியா, [[அல்பேனியா]], [[ஐபீரியா]] என்பன இப்பகுதியில் இருந்த பண்டைய அரசுகளாகும். இவை பிற்காலத்தில், [[மீடியப் பேரரசு]], [[அக்கீமெனியப் பேரரசு]], [[பார்த்தியப் பேரரசு]], [[சசானியப் பேரரசு]] ஆகியவற்றுள் அடங்கியிருந்தன. இக் காலத்தில் [[சோரோவாஸ்ட்ரியனியம்]] இப்பகுதியின் முக்கிய சமயமாக விளங்கியது. எனினும் இப்பகுதியில் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் இடையிலும், பின்னர் பாரசீகத்துக்கும் [[பைசண்டியம்|பைசண்டியத்துக்கும்]] இடையிலும் ஏற்பட்ட போட்டிகள் காரணமாக இரண்டு சமய மாற்றங்களும் இடம்பெற்றன. பைசண்டியம் இப்பகுதியைப் பல தடவைகள் கைப்பற்றியதாயினும் நிரந்தரமாக வைத்திருக்க முடியவில்லை. ஆர்மேனியாவின் முதன்மை மதமாகக் [[கிறிஸ்தவ சமயம்]] ஆகியபோது அச் சமயம் இப்பகுதியில் பரவி சோரோவாஸ்ட்ரியனியத்தை ஓரங்கட்டியது. பின்னர் பாரசீகம் இஸ்லாமியரால் கைப்பற்றப்பட்டபோது [[இஸ்லாம்]] இப் பகுதி முழுவதும் பரவியது. பிற்காலத்தில் இது [[செல்யுக்கு]]கள், [[மங்கோலியர்]]கள், உள்ளூர் அரசுகள், கானேட்டுகள் என்பவர்களின் கீழும் இருந்தது. பின்னர் ரஷ்யர் இதனைக் கைப்பற்றும்வரை மீண்டும் பாரசீகத்தின் ஆட்சிக்கும் உட்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/காக்கேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது