நீலகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வேளாண்மை: http://www.crida.in/CP-2012/statewiseplans/Tamilnadu%20(pdf)/TNAU,%20Coimbattore/TN24-NILGIRIS%2031.3.2011.pdf
வரிசை 80:
[[குறும்பர்]] பேசும் மொழியில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. குறும்பரில் பல வகையுண்டு. அதில் பெட்ட குறும்பர் 28 சந்ததிகளாகப் பிரிந்துள்ளனர். இவர்களைத் தவிர கசவர் என்ற பழங்குடிகள் நீலகிரி மாவட்டத்தில் சில ஊர்களில் வசிக்கின்றனர். பழங்குடி மக்களிடத்தில் அடிப்படை தேவையை நிறைவு செய்துகொள்ளும் மனப்பான்மையே காணப்படுகிறது. மற்ற மாநில பழங்குடிகளோடு ஒப்பிடும்போது நீலகிரிப் பழங்குடியினர் நல்ல நாகரீகம் பெற்றவர் என்றே சொல்லலாம்.
2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள்தொகை 7,62,141. இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சி - 394, குன்னூர் நகராட்சி - 122, உதகை வட்டம் - 4,329, குன்னூர் வட்டம் 2,397, கோத்தகிரி வட்டம் 6,197, கூடலூர் வட்டம் 15,450 என 28,889 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கல்வி அறிவு (சதவீதத்தில்) தோடர் - 29.52, கோத்தர் - 32.71, குரும்பர் - 18.13, முள்ளுக்குரும்பர் - 38.15, இருளர் - 21.78, பனியர் - 11.27, காட்டு நாயக்கர் - 9.03.இந்த ஆறு பழங்குடியின மக்களில், தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம், சுதந்திரத்திற்குப் பின்னும் முன்னேற்றம் அடையவில்லை. கூடலூரில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளா வாழ்ந்து வருகின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/article5379313.ece | title=நீலகிரி : சுதந்திரத்துக்கு முன் மன்றாடி.. சுதந்திரத்துக்குப் பின் நாடோடி.. | date=22 நவம்பர் 2013 | accessdate=25 நவம்பர் 2013 | author=ஆர். டி. சிவசங்கர்}}</ref>
 
=== குழந்தைகள் இல்லங்கள் ===
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 25 குழந்தை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. 24 குழந்தை இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழும், 1 அரசு குழந்தைகள் இல்லமும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து குழந்தை இல்லங்களும் இளைஞர் நீதிச்சட்டம் 2015 கீழ் பதிவு பெற்றுள்ளன. இப்பதிவு செய்தல்களும், அதற்குரிய கண்காணிப்புகளும் அரசின் நிதிஆதரவுடன் தொடர்ந்து பராமரிப்புத்திட்டங்களினால் வளர்ந்து பேணப்படுகின்றன. <ref>https://simplicity.in/news-detail.php?nid=19145&isnotify=n</ref> குழந்தைகள் பெற்றோரின் பராமரிப்பில் வளர்வதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். அதற்காக குழந்தைகள் கைவிடப்படுவதை தடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்தல், வளர்ப்பு பராமரிப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து நிதி ஆதரவு அளித்து கண்காணித்தல், குடும்ப சூழலுடனான பராமரிப்பை குழந்தைகளுக்கு வழங்குதல், குடும்பங்களை காத்தல் மற்றும் பெற்றோர் தங்கள் கடமையை செய்வதை ஊக்குவித்தல் போன்ற மிக அடிப்படையான செயல்முறைகள் அரசாலும், தனியார் தொண்டு நிறுவனங்களாலும் பேணப்படுகின்றன.<ref>https://simplicity.in/news-detail.php?nid=19145&isnotify=n</ref>
 
== மாவட்ட நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது