"கசன் கானேடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,040 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
==வரலாறு==
பதினைந்தாம் நூற்றாண்டில் வோல்கா பல்கேரியாவின் முன்னாள் பகுதிகளானவை (கசன் உளூஸ் அல்லது கசன் டுச்சி) சிதைவடைந்து கொண்டிருந்த தங்க நாடோடிக் கூட்டத்திடம் இருந்து பகுதி அளவு சுதந்திரத்தை பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சமஸ்தானமானது சுயாட்சி உடையதாக இருந்தது. இதன் ஆட்சியாளர்கள் போல்கர் என்று அழைக்கப்பட்ட பல்கேரிய அரசமரபில் இருந்து வந்திருந்தனர். இந்த அரசின் ஆரம்ப நிலைமை எப்படி இருப்பினும் இதனை தோற்றுவித்தவர் உலுக் முகமது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. உலுக் முகமது கான் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டு கானேட்டின் அரியணை ஏறினார். 1437 அல்லது 1438 இல் உள்ளூர் உயர்குடியினர் இவருக்கு சில உதவிகளை அரியணை ஏறுவதற்கு செய்தனர். 1445 இல் போல்கர் அரசமரபில் இருந்து முகமதுவுக்கு ஆட்சி செய்யும் அதிகார மாற்றமானது முகமதுவின் மகன் மக்ஸ்முத்தால் இறுதி செய்யப்பட்டது என கூறப்படுகிறது.
 
இந்த கானேட்டின் வரலாறு முழுவதுமே உள்நாட்டுக் கலகங்கள் மற்றும் அரியணைக்கான போராட்டங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது. 115 வருடங்களில் 19 முறை கான்கள் மாற்றப்பட்டனர். மொத்தமாக 15 கான்கள் ஆட்சி செய்துள்ளனர். அதில் ஒரு சிலர் பலமுறை அரியணை ஏறி உள்ளனர். கான்கள் பெரும்பாலும் செங்கிஸ்கானின் வழித்தோன்றல்களில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிலநேரங்களில் குடிமகன்களே கான்களை தேர்ந்தெடுத்தனர்.
 
[[பகுப்பு:மங்கோலிய நாடுகள்]]
5,683

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830015" இருந்து மீள்விக்கப்பட்டது