"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10,282 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
வரலாறு
(வரலாறு)
}}
 
'''துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' ''(Cricket World Cup)'' என்பது 1975 முதல் தற்போது வரை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வரும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியாகும். உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒரு நாள் போட்டிகள்]] பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 [[வீச்சலகு|நிறைவுகள்]]ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். [[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1983 உலகக்கிண்ணப் போட்டிக்கு]] பின்னர் இது 50 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற தொடர்களில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலிய அணி]] 5 முறையும் [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] மற்றும் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] ஆகிய அணிகள் தலா 2 முறையும் [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]] மற்றும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] ஆகிய அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.
 
[[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்]] [[இங்கிலாந்து]] மற்றும் [[வேல்சு]] ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதில் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] மற்றும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி|இறுதிப்போட்டி]] சமனில் முடிந்தது. எனவே ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக [[சிறப்பு வீச்சலகு|சிறப்பு நிறைவு]] ''(Super over)'' முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் சிறப்பு நிறைவும் சமனில் முடிந்ததால் விதிகளின் படி கூடுதலாக அதிக நான்குகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் [[இந்தியா]]வில் நடைபெறவுள்ளது.
==வரலாறு==
 
=== முதல் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன் ===
முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, செப்டம்பர் 24 மற்றும் 25 இல், 1844 ஆம் ஆண்டில்நடைபெற்றது. <ref>{{Cite news|url=http://www.espncricinfo.com/magazine/content/story/141170.html|title=The oldest international contest of them all|publisher=ESPN}}</ref> இருப்பினும், முதல் போட்டியாக 1877 இல் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியாவிற்கும்]] [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்துக்கும்]] இடையில் நடைபெற்ற [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போடியே அங்கீகரிக்கப்படட்து. மேலும் இரு அணிகளும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் [[ஆஷஸ்|தி ஆஷஷ்]] தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு ஆண்டும் போட்டியிட்டன. [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கா]] 1889 ஆமாண்டில் தேர்வுப்போட்டிகளில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றது.<ref>{{Cite web|url=http://content-uk.cricinfo.com/australia/content/match/62396.html|title=1st Test Scorecard|date=15 March 1877|publisher=ESPNcricinfo|access-date=28 January 2007}}</ref> ஒவ்வொரு நாடுகளும் மற்ற நாட்டில் சுற்றுப்பயணம்செய்து துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஒப்புதல் தெரிவித்தது. இதன் விளைவாக இருதரப்புகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன. [[1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1900 ஆம் ஆண்டு பாரிஸ் விளையாட்டுப்]] போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் துடுப்பாட்டமும் சேர்க்கப்பட்டது. கிரேட் பிரிட்டன் அணி பிரான்ஸை அணியினைத் தோற்கடித்து [[தங்கப் பதக்கம்|தங்கப்பதக்கம் வென்றது]] . <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/columns/engine/match/320838.html|title=Olympic Games, 1900, Final|date=19 August 1900|publisher=ESPNcricinfo|access-date=9 September 2006}}</ref> [[கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|கோடைகால ஒலிம்பிக்கில்]] நடைபெற்ற ஒரே துடுப்பட்டப்போட்டி இதுதான்.
 
1912 ஆம் ஆண்டில் முதல் சர்வதேச முத்தரப்பு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது.அப்போது தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றிருந்த மூன்ரு அணிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இதில்கல்ந்து கொண்டன. பார்வையாளர்கள் குறைவு மற்றும் பருவநிலை துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தும், அளவிற்கு ஒத்து வராரதது போன்ற காரணங்களினால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.<ref>{{Cite web|url=http://content-aus.cricinfo.com/australia/content/story/207248.html|title=The original damp squib|date=23 April 2005|publisher=ESPNcricinfo|archive-url=https://web.archive.org/web/20071016161938/http://content-aus.cricinfo.com/australia/content/story/207248.html|archive-date=16 October 2007|access-date=29 August 2006}}</ref> அப்போதிருந்து, சர்வதேச தேர்வுத் கிரிக்கெட் போட்டி பொதுவாக இருதரப்பு தொடர்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது: 1999 இல் முத்தரப்பு ஆசிய தேர்வுத் துடுப்பட்ட வாகையாளர் போட்டி நடத்தப்பட்டது. <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/magazine/content/story/483619.html|title=The run-out that sparked a riot|date=30 October 2010|publisher=ESPNcricinfo|archive-url=https://web.archive.org/web/20141022194822/http://www.espncricinfo.com/magazine/content/story/483619.html|archive-date=22 October 2014|access-date=18 February 2015}}</ref>
 
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்தது, 1928 இல் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]], 1930 இல் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], 1932 இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] மற்றும் 1952 இல் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] ஆகியவை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றன..இருப்பினும், சர்வதேச துடுப்பாட்ட போட்டியானது மூன்று, நான்கு அல்லது ஐந்து நாட்களில் இரு நாடுகள் பங்கேற்கும் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
 
1960 களின் முற்பகுதியில், ஆங்கில கவுண்டி மாகாண துடுப்பாட்ட அணிகள் துடுப்பாட்டப் போட்டியின் சுருக்கப்பட்ட பதிப்பை விளையாடத் தொடங்கின, அது ஒரு நாள் மட்டுமே நீடித்தது. 1962 ஆம் ஆண்டில் மிட்லாண்ட்ஸ் நாக்-அவுட் கோப்பை என அழைக்கப்படும் நான்கு அணிகள் கல்ந்துகொண்ட [[ஒற்றை வெளியேற்றப் போட்டி|நாக் அவுட் போட்டியுடன்]] இந்த வகையான ஒருநாள் போட்டிகள் தொடங்கியது. <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/magazine/content/story/510124.html|title=The low-key birth of one-day cricket|date=9 April 2011|publisher=ESPNcricinfo|archive-url=https://web.archive.org/web/20130919032251/http://www.espncricinfo.com/magazine/content/story/510124.html|archive-date=19 September 2013|access-date=15 July 2014}}</ref> மற்றும் 1963 ஆம் ஆண்டில் வறையிட்ட துடுப்பாட்டப் போடிகள் ஜில்லெட் கோப்பை எனும் பெயரில் இங்கிலாந்தில் பிரபலமடைந்தது. முதல் ஒருநாள் சர்வதேச போட்டி [[ 1970–71ல் ஆஸ்திரேலியாவில் ஆங்கில கிரிக்கெட் அணி|1971]] ஆம் [[ 1970–71ல் ஆஸ்திரேலியாவில் ஆங்கில கிரிக்கெட் அணி|ஆண்டில்]] மெல்போர்னில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது. அப்போது போட்டியின் ஐந்தாவது நாளில் மழை பெய்தது.அதனால் அதற்கு இழப்பீடாக ஓவருக்கு எட்டு பந்துகள் வீதம் 40 ஓவர்கள் வீசப்பட்டன.<ref>{{Cite web|url=http://newicc.cricket.org/icc/odi/what_is_one-day_cricket.html|title=What is One-Day International cricket?|publisher=newicc.cricket.org|archive-url=https://web.archive.org/web/20061119054342/http://newicc.cricket.org/icc/odi/what_is_one-day_cricket.html|archive-date=19 November 2006|access-date=10 September 2006}}</ref>
<br />
===மேற்கிந்தியத் தீவுகளின் இருமை (1975-1983)===
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து ,கிழக்கு ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830045" இருந்து மீள்விக்கப்பட்டது